“1966 நெய்வேலியில் (மந்தாரகுப்பம்) அன்றைய
சேலம் கோட்ட மாநாடு நடைபெற்றது. ஒரு பிரிவினர் சார்பாளர்கள் கட்டணத்தைத் திருப்பித்
தர வேண்டுமென்ற பிற்போக்கு தனமான கோரிக்கையை வைத்தனர். முறையற்ற இக் கோரிக்கையினை
இயல்பாகவே வரவேற்புக் குழு ஏற்கவில்லை. மாநாடு விவாதங்கள் துவங்குவதற்கு முன்பாக
இதையே காரணமாகச் சொல்லி அந்த அணி அடாவடி செய்து வெளியேறியது. வரவேற்புக் குழு
அளிக்கும் உணவை ஏற்கமாட்டோம் என்று வெளியே போனார்கள். சார்பாளர்களில் ஒரு
பகுதியினர் சாப்பிடாததால் வரவேற்புக் குழுவும் கோட்ட சங்க நிர்வாகிகளும் தாமாக முன்
வந்து உண்ணாநிலை மேற்கொண்டனர். அப்போது மாநிலச் செயலராக இருந்த தோழர் ஜெகன் தாமும்
உண்ணாவிரதம் மேற்கொண்டார்.”
தோழர் ஜெகன் நினைவு நாளில் கடலூர் தோழர் டி.ரகுநாதன்
ஜனசக்தி
இதழில் எழுதியிருந்த
கட்டுரையிலிருந்து.
25.06.2013 அன்று வேலூரில் நடைபெற்ற மாநில
செயற்குழுவில் பங்கேற்ற தோழர்களில் சில உண்ணாமல் இருந்த நிலையில் வரவேற்புக் குழு
அளித்த அருசுவை உணவை ரசித்து அருந்தியவர்களுக்கு தோழர் ஜெகன் வாழ்க்கையோ அவரது
வழிமுறையோ தெரியாமல் இருக்கலாம். அதை சுட்டிக்காட்டிய என்னை அவர்கள் மன்னிப்பார்கள்
என்றே நம்புகிறேன். – மாலி.
தகவல்: ஈரோடு வளைதளம்
No comments:
Post a Comment