Saturday, 29 June 2013




30.06.2013 அன்று   BSNL நிறுவன பணியில் இருந்து ஓய்வு 

பெரும் நமது அன்புத் தோழர், நமது சங்கத் துணை பொதுச் 

செயலர் தோழர் சி.கே. மதிவாணன் அவர்களுக்கு 

திருவண்ணாமலை இன்டோர் கிளைத் தோழர்களின் 

சார்பிலான நல்வாழ்த்துக்கள்.

தங்களின் அனுபவத்தை எங்களுக்கு உரமாக்குவோம் !

தங்களின் சமூக பணிக்கு கை கொடுப்போம் !!


வாழ்க பல்லாண்டு !!!

Friday, 28 June 2013

  1. செம்மையாக  செயல்பட தொடர்ந்து குரல் கொடுப்போம்!

    1. அவையால் ஆய்படுபொருள் ஏற்க படாமல் நடத்தப்பட்ட ஒரு செயற்குழு, மாற்று கருத்தை மதிக்காமல் நடந்த ஒரு கூட்டம், மாற்று கருத்து கொண்ட பொறுப்பாளர்களை, தலைவர்களை அவதூறு செய்வதற்கு பெரும்பகுதி நேரத்தை எடுத்துக்கொண்ட ஒரு கூட்டம்,  தற்புகழ்ச்சி, தனக்கு பிடித்தவர்களை அவர்களே நெலியும் அளவிற்கு புகழாரம் செய்வது - இது தான் வேலூர் செயற்குழுவின் சாரம். 

                  மாநில மாநாடு முடிவு செய்யாத, அமைப்பு விதிகளுக்கு எதிராக, அணி பார்வையில் தன்னிச்சையாக நுழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் என்ற முறை சரியல்ல. இது பற்றி விவாதிக்க ஆய்படுபொருளில் சேர்க்கவேண்டும் என்று தான் கோரினோம்.    

               ஆனால், ஆய்படுபொருளில் சேர்க்க மாட்டோம் என அடம்பிடித்து விட்டு, உத்தம(?) தலைவர்கள் சேது, ஜெயபால் ஆகியோரை செயற்குழுவில் இருந்து நீக்க கோரினோம் என்கிறார்கள் சிலர்.  (இதே தலைவர்கள் பற்றி இன்று பேசுபவர்களின் முந்தைய பேச்சை நாம் நினைவுபடுத்தினால் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்.)

                   பல லட்ச ரூபாய்கள் செலவு செய்து கட்டப்பட்டுள்ள, மாநில சங்க கட்டிடத்தில்  மாநில செயலர் தங்குவதில்லை. சங்க அலுவலகமாக அது செயல்படுவதும் இல்லை. ஊழியர்கள் தங்குமிடமாக அது இல்லாமல், சங்க அலுவலகமாக, செயல்பாட்டு தளமாக அதை மாற்ற வேண்டும்.இது பற்றி விவாதிக்க ஆய்படுபொருளில் சேர்க்கவேண்டும் என்று தான் கோரினோம். 
                  ஆனால் இதுபற்றி பேச அனுமதி இல்லையாம் 
                  சின்னம்மாள் என்ற தோழியர், நமது சங்கத்தின் மீது இருந்த நன்மதிப்பால்,  தன்னுடைய உடைமைகளை, ஓய்வூதிய பலன்களை நமது சங்கத்திற்கு எழுதிவைத்தார். அதை நிர்வகிக்க அமைக்கப்பட்ட சின்னம்மாள் அறகட்டளையின் நிலை என்ன? அது என்ன ஆயிற்று என விவாதிக்க ஆய்படுபொருளில் சேர்க்கவேண்டும் என்று தான் கோரினோம்.      

             ஆனால் இதுபற்றி பேச அனுமதி இல்லையாம். (கணக்கு சிலருக்கு பிணக்கு ஆயிற்றே!)

                 அடாவடி செய்தோம்! அத்துமீறல் செய்தோம்! ஆர்பரிதோம்! என அவதூறு செய்து எல்லாவற்றையும் மறைக்க பார்கிறார்கள். முறைப்படி விவாதிக்க, அமைப்புவிதிகளின் படி செயற்குழுவை நடத்த வேண்டுகோள் வைத்தோம். தொடர்ந்து வலியுறுத்தியும் எற்கபடாததால் வெளிநடப்பு செய்து அவைக்கு வெளியே அமர்ந்து எதிரப்பை தெரிவித்தோம்.

                 ஆனால், செயற்குழு உறுப்பினர் இல்லாத நூற்றுக் கணக்கானவர்களை திட்டமிட்டு வரவழைத்து, நியாயம் கேட்டவர்களை சூழ்ந்து, "பேசாதே!", "வெளியே போ!" என கத்தி அநாகரிகமாக நடக்க செய்தவர்கள், அவையின் வெம்மை கண்டு வெளியேறினோம் என ஆனந்த படுகிறார்கள். 

                 அமைப்பு விதிகளை மிதித்து, மாற்று கருத்துக்கு மதிப்பளிக்காத, ஜனநாயகம் அற்ற இடத்தில வெறும் உபசரிப்பு மட்டும் இருந்து என்ன பயன்? என்று அங்கு கொடுக்கப்பட்ட உணவை ஏற்க மறுத்தோம்.

                இதனால் பலர் அங்கு உண்ணாவிரதம் இருந்தார்களாம். சுண்டலும் கடலை மிட்டாய் , டீயும் மட்டும் சாப்பிட்டால் அது ஜெகன் வழி உண்ணாவிரதமாம்! (ஜெகன் மன்னிப்பாராக!)

      "நிறைவான செயற்குழு, வெற்றிகரமான செற்குழு, அடாவடியும்.. அத்துமீறலும்" தொடரக்கூடாது என ஒலித்த செயற்குழு, (நீண்ட பட்டியலிட்டு) இதையெல்லாம் விவாதித்த செயற்குழு" 

              என தனக்கு தானே சொரிந்து கொள்ளாமல், நடந்தவற்றை, நியாயத்தை, ஊழியரின் எதிபார்ப்பை நாணய உணர்வுடன் ஆராய்ந்து சரியான வழியில் பயணிக்க வேண்டும் எனபதே  நமது விருப்பம். ரொம்ம்பவும் சொரிந்தால் ரணம் மட்டுமே மிஞ்சும். 

       மதிமயக்கம் எமக்கு இல்லை! எந்த "மதி"யின் மயக்கமும் எமக்கு இல்லை! சிலருக்கு தான் மணி(Money)மயக்கம் நியாயத்தை திரை போட்டு மறைக்கிறது.
                  தியாக தலைவர்களின் ஈர்ப்பில் NFTE பேரியக்கத்தில் இணைந்து நியாயத்தின் குரலாக, பல ஆண்டுகளாக அன்பை, எதிப்பை, அவமானத்தை எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துகொண்டு தான் இயங்கிவருகின்றோம். நமது இயக்கம் அதன் தியாக பாதையில், வழி தவறாமல்  செம்மையாக  செயல்பட தொடர்ந்து குரல் கொடுப்போம்! 

      நன்றி: திருச்சி வளைதளம்
அமைப்பு விதிக்கு மாறானதை ஏற்க முடியாது !
                     
மதுரையில் நடந்த மாநில மாநாட்டில் 21 பதவிகளை நிரப்ப அவையின் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மாநிலச் செயலர் தன்னிச்சையாக தனது வெற்றிக்காக அமைப்பில் பிளவை உருவாக்கிய வர்களுக்கு சன்மானம் வழங்கும் வகையில் 5 சிறப்பு அழைப்பாளர்களை அறிவித்தார்.

அவர்கள் உண்மையிலேயே இளைஞர்களுக்கும் மகளிர் தோழியர்க்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் தனது இளமை காலந்தொட்டு பல ஆண்டுகளாக மாநில நிர்வாகியாக உள்ள தோழர்களுக்கு பதிலாக இளைஞர்களையும் மகளிர் தோழியரையும் மாநில சங்க நிர்வாகிகளாக நேரடியாக தேர்ந்தெடுத்து இருக்கலாம்.ஆனால் தங்களுக்கு ஆதரவாக இல்லாத மாவட்டங்களில் போட்டியாக செயல்பட அவர்களையும் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கணக்கு போடுவதால்தான் இப்பிரச்னையே வருகிறது. இளைஞர்களுக்கு  வாய்ப்பு தரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அருமைத்தோழர் ஜெகன் காலத்திலிருந்து நாம் எடுத்து செயலாற்றிவரும்  கொள்கை முடிவு : 
 " தோழர்கள் பணி ஓய்வு பெற்ற பின் நடக்கும் மாநாட்டில் அவர்களை தேர்ந்தெடுப்பதில்லை"

அந்த கொள்கை முடிவை அமலாக்க வேண்டும் என்பதே நமது வலியுறுத்தல். 

அதை இப்போது மீற வேண்டும் என்ற அவசியம் என்ன என்பதே நமது நியாயமான கேள்வி !

சிறப்பு அழைப்பாளரை  நியமனம் செய்ய மாநில செயலருக்கு அதிகாரம் சங்க சட்ட விதிகளில் உள்ளது என்று மாநிலச்செயலர் கூறியவுடன், அதை அவையில் படித்துக் காட்டுமாறு மாநிலப் பொருளர் தோழர் அசோகராஜன்  வேண்டுகோள் வைத்தார். இறுதி வரை மாநிலச் செயலர் அதைப் படித்துக் காட்டவில்லை. ஏனென்றால் அப்படி எந்த அதிகாரமும் மாநிலச் செயலருக்கு வழங்கப்படவில்லை என்பதே உண்மை.                                               
கோவை மாவட்ட செய்தி:

                            Accounts செக்ஷ்னுக்கு நன்றி !

திரு. S.லக்ஷ்மி நரசிம்மன் A.O. Pay Bill II அவர்களின் தலைமையில் இன்று 200 ஊழியர்களுக்கு முதல் கட்டமாக 78.2 % Pay Fixation உத்திரவு வழங்கப் பட்டுள்ளது. விரைந்து செயல்பட்ட அனைவருக்கும் எமது நன்றி 
IDA 4% உயர்வு.

இப்போது பெறுவது = 74.9%

உயர்வு             =  4.0%


01/07/2013 முதல்   = 78.9%
காஞ்சி வளைதளத்தில் இருந்து.

சங்கத் தலைவனுக்கு விழா எடுக்க
சங்கமித்தோர் ஆயிரம்
மன்றத்திலே (ராஜா அண்ணாமலை) மணிவிழா எடுக்க
அலைகடலென ஆர்ப்பரித்த அனைவரின் வரவால்
ஆனந்தம் பொங்கியது அனைவரின் உள்ளத்தில்
பணிநிறைவு பாராட்டு விழா
பாரோர் போற்ற நடைந்தேறியது
விழா காட்சிகள் வியக்க வைத்தது அனைவரையும்

இதோ உங்கள் பார்வைக்கு சில......








Thursday, 27 June 2013


நன்றி: ஜனசக்தி 26/6/2013


ர‌யில் டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் கட்டணம் திரும்ப பெறுதல் புதிய விதிமுறைகள்!

தற்போது பயணம் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் 24 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால் மட்டுமே முழு தொகையும் திரும்ப கிடைக்கும். ஆனால் புதிய விதிமுறைகளின்படி 48 மணி நேரத்துக்கு முன்னதாக ரத்து செய்தால்தான் முழு கட்டணம் திரும்ப பெற முடியும்.

ர‌யில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் பாதி கட்டணம் இதுவரை வழங்கப்பட்டது. அவற்றை 6 மணி நேரத்துக்கு முன்னதாக ரத்து செய்தால் இனி பாதி கட்டணத்தை பெற முடியும்.

500 கிலோ மீட்டர் பயணம் தூரம் உள்ள டிக்கெட்களுக்கு ர‌யில் புறப்பட்ட பின்னர் 12 மணி நேரத்திற்குள் கட்டணம் திரும்ப பெறும் வசதி தற்போது உள்ளது.

ஆனால் புதிய விதிமுறையின்படி ர‌யில் புறப்பட்டு 2 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ஒப்படைத்து பணம் பெற வேண்டும். இது போன்ற பல மாற்றங்கள் டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் பணம் திரும்ப பெறுதலில் கொண்டுவரப்படுகிறது.

ஜூலை 1-ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிற

Wednesday, 26 June 2013

   சிலரின் வேடம் கலைந்தது., ஒற்றுமை நாடகமும் முடிந்தது.

 

   நமது மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு

வேலூரில் துவங்கியது.

        மாநில செயலர் அறிமுக (ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும்

வகையில் அனைவரும் பேச வழி அமைத்துக்கொடுத்தார்) உரைக்குப்பின்,

பல மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், கீழ் கண்ட பொருள்களை

அஜண்டாவில் சேர்க்க வேண்டுகோள் விடுத்தனர்.

 

1.  மதுரை மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படாமல், கொல்லைப்புற வழியாக

     உடலுக்கு தேவையற்ற 6 வது விரலைப்போல,

     6 சிறப்பு அழைப்பாளர்களை, (ரிட்டயர்டு தலைவர்கள் உட்பட) தேர்ந்தெடுத்தது,

     நமது சங்க அமைப்பு விதிகளுக்கு எதிரானது, எனவே அவர்கள் அறுவரும்

     தேர்ந்தெடுத்தது சட்டப்படியானதல்ல என்ற பொருளும்,

 

2.  நமது தமிழ் மாநிலத்தில் பல தோழர்களிடம் வசூல் செய்து,  பல லட்சம் ரூபாய்

     செலவு செய்து கட்டிய கட்டிடத்தில் நமது மாநில செயலர் குடியேற, சால்ஜாப்பு

     சொல்லி பல ஆண்டுகளாக மறுதலிப்பது,  நமது தோழர்கள் அனைவரையும் வருத்தப்பட    வைப்பதாக உள்ளது எனவே, மாநில செயலர் உடனடியாக, சங்க அலுவலகத்தில் குடியேற வேண்டும்

     என்ற அஜண்டாவும்,

 

3.  சின்னம்மாள் அறக்கட்டளை பற்றி பல மாநில செயற்குழு கூட்டங்களில் விவாதித்தும்

     யார் அதன் பொருப்பாளர்கள் என்பதை, திறையிட்டு  மூடி மறைப்பது ஏன்? என்ற  

     விவாத பொருளும், மாநில செயற்குழுவில் சேர்க்க,

 

               பல தோழர்கள், மதியம் வரை சேர்க்க கோரியும், மாநில செயலர் பட்டாபிராமன்

ஒற்றை காலில் நின்று, மாநில செயற்குழு சிறப்புடன் நடைபெறாமல் கவனமாக பார்த்துகொண்டார்.

 

              மாநில செயலர் பட்டாபிராமன் துவக்கவுரை தொடங்கி,  முடிவுரை வரை நமது அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர் மதிவாணனையும்,  சம்மேளன செயலர்

தோழர் ஜெயராமனையும், கடுமையான அவதூறு செய்யும் பிரச்சாரமாகவே இருந்தது.

 

              இந்த மாநில செயற்குழுவின் நோக்கமே!!! நமது சங்கத்தலைவர்களை, தரக்குறைவாக

விமர்சிக்க போடப்பட்டதோ? வேண்டும் என்றே வேலூரில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதோ? என்று சாதாரண தோழர்கள் நினைக்கும் அளவிற்கு இருந்ததது.

 

            சங்கத்தில் ஒற்றுமையான செயல்பாட்டிற்கு குந்தம் விளைந்திடவே,  ஓய்வு பெற்ற சிலரும், திட்டமிட்டு களம் இறங்கி  ஒற்றுமை ஏற்படாமல் உறுதியாக பார்த்துகொண்டனர்.

            இதற்கு மாநில செயலர் பட்டாபிராமன் மிகவும்  உறுதுணையாக இருந்தார்.

 

           செயற்குழு இறுதிவரை,  நமது சமேளன செயலர் தோழர் ஜெயராமன் அமைதியாக


 இருந்து வாழ்த்துரை வழங்கினார்.தோழர்கள் O.P.குப்தா, ஜெகன் அவர்களின் கொள்கை வழித்தோன்றல், தான் தான் என்பதை இதன் மூலம் நிரூபித்தார்.

தகைமையாளர்!


“1966 நெய்வேலியில் (மந்தாரகுப்பம்) அன்றைய சேலம் கோட்ட மாநாடு நடைபெற்றது. ஒரு பிரிவினர் சார்பாளர்கள் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டுமென்ற பிற்போக்கு தனமான கோரிக்கையை வைத்தனர். முறையற்ற இக் கோரிக்கையினை இயல்பாகவே வரவேற்புக் குழு ஏற்கவில்லை. மாநாடு விவாதங்கள் துவங்குவதற்கு முன்பாக இதையே காரணமாகச் சொல்லி அந்த அணி அடாவடி செய்து வெளியேறியது. வரவேற்புக் குழு அளிக்கும் உணவை ஏற்கமாட்டோம் என்று வெளியே போனார்கள். சார்பாளர்களில் ஒரு பகுதியினர் சாப்பிடாததால் வரவேற்புக் குழுவும் கோட்ட சங்க நிர்வாகிகளும் தாமாக முன் வந்து உண்ணாநிலை மேற்கொண்டனர். அப்போது மாநிலச் செயலராக இருந்த தோழர் ஜெகன் தாமும் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.”

தோழர் ஜெகன் நினைவு நாளில் கடலூர் தோழர் டி.ரகுநாதன் ஜனசக்தி
                         இதழில் எழுதியிருந்த கட்டுரையிலிருந்து.

25.06.2013 அன்று வேலூரில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் பங்கேற்ற தோழர்களில் சில உண்ணாமல்  இருந்த நிலையில் வரவேற்புக் குழு அளித்த அருசுவை உணவை ரசித்து அருந்தியவர்களுக்கு தோழர் ஜெகன் வாழ்க்கையோ அவரது வழிமுறையோ தெரியாமல் இருக்கலாம். அதை சுட்டிக்காட்டிய என்னை அவர்கள் மன்னிப்பார்கள் என்றே நம்புகிறேன். – மாலி.
தகவல்: ஈரோடு வளைதளம்

Saturday, 22 June 2013

சாதனை புரிந்த ஏழை மாணவ மாணவியருக்கு ஊக்க பரிசு வழங்கிய விழா!

வறுமையை எதிர்கொண்டு உயர்கல்வி பெற ஞான தந்தை ஞானையா அளித்த   உதவித்தொகை வழங்கிய விழா!

அதிக மதிப்பெண் பெற்ற திருச்சி BSNL ஊழியர் குழந்தைகளுக்கு உற்சாக பரிசு வழங்கிய விழா!

சம்மேளன செயலர் தோழர் G ஜெயராமன் கலந்துகொண்டு வாழ்த்திய சிறப்பு விழா!

AIBSNLOA சங்கத்தின் சார்பாக சாதனை படைத்த ஏழை மாணவ மாணவியருக்கு ஊக்க பரிசு வழங்கிய விழா சிறப்பாகவும் நெகிழ்ச்சியுடனும் திருச்சி PGM அலுவலகத்தில் 21-06-2013 அன்று நடைபெற்றது. நமது மார்க்சிய ஆசான் தோழர்.ஞானையா அளித்த கல்வி உதவித்தொகையை திருச்சி மாவட்ட அரசு பள்ளிகளில் படித்த ஏழை  ஏழை மாணவ மாணவியருக்கு வழங்கி நமது சம்மேளன செயலர் G ஜெயராமன் அவர்கள் வழங்கி பாராட்டுரை நிகழ்த்தினார்.

மாவட்ட தலைவர் தோழர்.C கிருஷ்ணன் DGM அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சமுக சிந்தனை உயிர்பியக்கதின் அமைப்பாளர் தோழர் M செல்வராஜ் அவர்களும், AIBSNLOA சங்கத்தின் தென்மண்டல அமைப்பு செயலர் தோழர்.குணசேகரன் அவர்களும் கலந்துகொண்டு பாராட்டுரை நிகழ்த்தினர். 

ஏழை குழந்தைகளின் கல்வி வளர்சிக்காக அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட ஆசிரியை தோழியர் விஜயராணி அவர்களும் பாராட்டி கவுரவிக்கப்பட்டார்

SEWA BSNL சங்க மூத்த முன்னோடி தோழர் நம்பியார், AIBSNLOA சங்க CWC உறுப்பினர் தோழர்.மனோகரன், தஞ்சை தோழர்கள் தங்கமணி, ஜெயராமன், NFTE சங்க மாவட்ட செயலர் பழனியப்பன், மாநில துணை செயலர் சுந்தரம், மாவட்ட துணை செயலர்கள் பாலகுரு, மில்டன் உளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

அதிக மதிப்பெண் பெற்ற திருச்சி BSNL ஊழியர் குழந்தைகளுக்கு உற்சாக பரிசு வழங்கிய விழாவாகவும் இவ்விழா அமைந்தது.

தொழிற்சங்க நிகழ்வுகளை தாண்டி சமுக மேம்பாட்டிற்கான செயல்களையும் செய்யவேண்டும் என்ற சிந்தனையுடன் விழா ஏற்பாடுகளை செய்த தோழர். காமராஜ் அவர்களின் பணி அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது

  From Trichy Web site

Friday, 21 June 2013

 இந்த மாதத்தில் கிடையாது !

   78.2% அடிப்படையில்  புதிய ஊதிய மாற்றம் இம்மாத சம்பளத்தில் சாத்தியமில்லை என்று BSNL HR செய்தி கூறுகிறது. 

Monday, 17 June 2013


NFTE  சந்தா ரூ10.00க்கு பதிலாக ரூ15.00ஆக ஜுன்-2013ல் 

இருந்து பிடித்தம் செய்யப்படும். மத்திய சங்கம்=ரூ5.00,

மாநிலம்=ரூ4.00, மாவட்டம்=ரூ3.00, கிளை=ரூ3.00.





நன்றி: ஜனசக்தி 16-06-2013

Sunday, 16 June 2013



திருவண்ணாமலையில் 14-06-2013 அன்று தோழர் சி.கே. மதிவாணன் சம்மேளன துணை பொதுசெயலாளர் NFTE-BSNL அவர்கள் குடும்பத்தினருடன் தோழர் ஆர்.செல்வராஜு NFTE-BSNL அவர்களின் இல்லத் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சம்மேளன செயலாளர் தோழர் ஜி.ஜெயராமன் அவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். வேலூர் NFTE மாவட்ட செயலாளர் தோழர் அல்லிராஜா அவர்களும் விழாவில்  மணமக்களை வாழ்த்தினார்கள். விழாவில் மணமக்கள் சார்பில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ. 5,000/* தோழர் சி.கே.மதிவாணன் அவர்களிடம் வழங்கப்பட்ட்து. திருமண வரவேற்பு விழாவில் கல்ந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்இதயங்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் நன்றி.

Friday, 7 June 2013


சற்று முன் கிடைத்த தகவல்:

78.2 சதவீதம் கிராக்கிப்படி இணைப்புக்கு DOT ஒப்புதல் அளித்துவிட்டது.

தகவல்: NFTE CHQ WEBSITE
ஜெகன் நினைவைப்  போற்றுவோம் !


தலைவனே! 
உன்னால் ஈர்க்கப்பட்ட நாங்கள் உன் லட்சியப் பணியில் , உன் படைவரிசையில் முதல் அணியை நிற்போம்!
நீ வழி நடத்து!
 நாங்கள் உன் வழி நடப்போம்!

தொழிலாளர் இயக்கத்திற்கு
 நம் தலைவர் காட்டிய வழியில்
நம்மை மறு அர்ப்பணம் செய்வோம்

Monday, 3 June 2013

                நியாயமான நடவடிக்கை

7% வாக்குகள் பெறாத TEPU, BSNLMS போன்ற சங்கங்களுக்கு  JCM சீட்டை ஒதுக்கக்கூடாது என்று FNTO சங்கம்   எர்ணாகுளம் உயர்நீதி மன்றத்தில் தடை பெற்றுள்ளது.

FNTO gets Stay for allotting seats in JCM to TEPU, BSNLMS, SEWA BSNL etc 

Hon. Kerala High Court, Kerala, at Ernakulam on 30.05.2013 admitted a Writ Petition No: 13065/2013(A) filed by the National Union of BSNL Workers (FNTO) New Delhi, praying 
“to issue an interim  direction to the BSNL (2nd respondent) not to induct or grant membership to members belonging to any one of the Unions which has not secured the prescribed 7% votes in the referendum and to to stay all further proceedings for so inducting ineligible persons in the Council at all levels formed by the BSNL, pending disposal of the above Writ Petition.

The Court passed following Order:

 “ORDER"
Admit.
Assistant Solicit general of India takes notice for R1. 

Standing Counsel  Sri. Maathew K. Philip takes notice for R2. 

Urgent Notice by speed post to R3 & R4.

There will be an interim direction to the second respondent not to induct or grant membership to anyone of the Unions which has not secured the prescribed 7% votes in the referendum."





சென்னை மாநில சங்க அலுவலக செயலராக மிகுந்த பொறுப்போடு செயல்படும் தோழர் அன்புகுமார் அவர்களின் ஓய்வுக் காலம் பயனுள்தாக, சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் !