Friday 6 September 2013


புதிய பென்ஷன் மசோதா 


நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

தொழிலாளர் விரோத பென்ஷன் மசோதா 04.09.2013 அன்று 

நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.   UPA அரசின் பொருளாதார 

கொள்கைகளை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் BJP கட்சியும் 

இந்த மசோதா நிறைவேற ஒத்துழைத்துள்ளது. 

 தொழிலாளர்கள் பங்களிப்பு (CONTRIBUTION) எந்த அளவிற்கு இருக்க

 வேண்டும் என்று சொல்லும் இந்த மசோதா பென்ஷன் எவ்வளவு 

நிரந்தரமாக கிடைக்கும் என்பதை சொல்ல மறுக்கிறது. 

வசூலிக்கப்படும் தொகை பங்கு வர்த்தகத்தில் புழக்கத்தில் விடப்படும் 

என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

ஐரோப்பா போன்ற நாடுகள் பொருளாதார சிக்கலில் இருந்தபொழுது  

இந்த பென்ஷன் உத்தரவாதம் எப்படி சீரழிக்கப்பட்டது என்பது 

பொருளாதார வல்லுனர்களுக்கு புரியாததா என்ன? அனைத்திற்கும்

 மேலாக  பன்னாட்டு நிதி நிறுவனங்கள் (MULTINATIONAL 

FINANCIALCOMPANIES) இந்த நிதியாதா ரத்தை கையாளவும் 

வழிவகுத்துள்ளது இந்த மசோதா! 


இடதுசாரிகளின் பலத்த எதிர்ப்பிற்கும் இடையில் இந்த மசோதா

  நிறைவேற்றப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையும் 

தொடர்போராட்டமும் மட்டுமே இதை போன்ற தொழிலாளர் விரோத 

செயல்களை முறியடிக்கும் .

NFTE சென்னை வடக்கு மாவட்டம் 

No comments:

Post a Comment