Tuesday, 4 October 2016

மணமுறிவு  DIVORCE  பெற்று பெற்றோர்களை நம்பி வாழும் 
பெண் பிள்ளைகளை BSNL MRS  மருத்துவத்திட்டத்தில்   சேர்த்துக்கொள்ளலாம் என CORPORATE அலுவலகம் விளக்கமளித்துள்ளது. மணமுறிவு பெற்ற பெண் பிள்ளைகள் 
தாய் தந்தையருக்குப்பின் குடும்ப ஓய்வூதியத்தையும் பெற தகுதியுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
================================================
சாமியார் இராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதப் பொருட்களுக்கான செலவை    BSNL மருத்துவத் திட்டத்தின்  மூலம் ஈடு கட்ட இயலாது 
என BSNL  நிர்வாகம் அறிவித்துள்ளது.
================================================
JAO தேர்வில் வெற்றி பெற்ற சில தோழர்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்களது பதவி உயர்வை மறுத்துள்ளனர். அத்தகைய காலியிடங்களில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றுள்ள மற்றைய தோழர்களுக்கு வாய்ப்பளிக்க BSNL  நிர்வாகத்தை நமது மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
================================================
24/09/2016 அன்று நடைபெற்ற JTO இலாக்காத்தேர்வில் பொருத்தமற்ற  தவறான  சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அத்தகைய கேள்விகளுக்கு முழு மதிப்பெண் அளிக்க நிர்வாகத்தை 
நமது மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
================================================
JTO பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டு விட்டது.
 ஆனால் JAO பயிற்சி வகுப்பு பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இதனிடையே JAOவாகத்  தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளிக்க முயற்சிகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்காலிகப் பதவி உயர்வால் எந்தப்பயனும் இல்லை. தேர்ச்சி பெற்ற தோழர்களை உடனடியாக பயிற்சிக்கு அனுப்புவதே சரியானதாகும்.
 
தகவல்: காரைக்குடி NFTE

No comments:

Post a Comment