டெலாய்ட்டி திட்டம் சீரமைப்புத் திட்டமா ?
ஆட்கொல்லி சீரழிவுத் திட்டமா ?
( Deloittee consultant) என்ற நிறுவனத்திடம் பரிந்துரையை கேட்டிருந்தது
BSNL நிர்வாகம்.
ஆகஸ்ட் 12, 13 தேதிகளில் அனைத்து மாநில உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. டெலாய்ட்டி அறிக்கையின் முக்கிய பகுதிகளை அந்த அதிகாரிகளுக்கு வெளியிட்டு, அதை தங்களது மாநிலத்தில் அமலாக்குவது பற்றிய கருத்துக்களோடு வருமாறு
BSNL கார்ப்பரேட் அலுவலகம் அனைத்து CGMகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள் :
1. தலமட்ட நிர்வாக அமைப்பு SSA அளவில் என்பதை மாற்றி ஏரியா
அளவில் அமைப்பது.
2. சிறு SSAக்களை பெரிய SSAக்களுடன் இணைத்து ஒருங்கிணைப்பது.
3. இந்தியா முழுவதும் தற்போது 329 SSAக்கள் உள்ளன. அவற்றை
167ஆக குறைப்பது.
உதாரணத்திற்கு :
தமிழ் மாநிலத்தில் 17 SSAகளுக்கு பதிலாக 10 ஏரியா அலுவலகங்கள் மட்டும் இருக்கும்.
தஞ்சாவூர், கும்பகோணம், தர்மபுரி, விருது நகர், நாகர்கோவில் ஈரோடு ஆகியவற்றில் ஏரியா அலுவலகம் கிடையாது.
காரைக்குடி, நீலகிரி மாவட்டம் பற்றி குறிப்பு ஏதும் கிடையாது.
தவறுதலாக தெலுங்கானவில் உள்ள கரீம் நகர் தமிழ் மாநில SSAவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
4. ஏரியா அலுவலகங்கள் , மார்க்டெட்டிங், விற்பனை, விற்பனைக்கு
பிறகு சந்தாதாரர்களுக்கு சேவை செய்யும் பணி, தனியாருக்கு
விடப்பட்ட பணிகளை மேற்பார்வை இடுவது ஆகியவற்றில் முழு
கவனம் செலுத்த வேண்டும்
5. டெகினிகல் பணிகளான திட்டமிடல், ட்ரான்ஸ்மிஷன் போன்ற
பணிகளை மாநில அலுவலகம் செய்யவேண்டும்,
6. ERP திட்டம் அமலான பிறகு ஊழியர்கள் , நிதி சம்பந்தப்பட்ட பணிகளை மாநில அலுவலகம் செய்ய வேண்டும்
7. விற்பனை, மார்கெட்டிங், IT உயர் தொழில் நுட்பம் ஆகிய பகுதிகளில்
மிகத்தேவையான கூடுதல் திறமைகளை மேம்படுத்துவது.
8. தனியார் துறைகளில் அதிகாரிகள் அல்லாதோர் இல்லை !
(No Non Executives) என்ற நிலை நிலவுகிறது.
(அவர்கள் செய்யும் அனைத்து பணிகளும் ஒப்பந்த ஊழியர்களால் செய்யப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை)
ஆகவே, புதியதாக முழு ஊழியரல்லாத ( நிரந்தமில்லா) அதிகாரிகளை கீழ்க்கண்ட எண்ணிக்கையில் நியமிப்பது. (On Off Role basis)
சேல்ஸ் : 8000+
மார்க்கெட்டிங் : 1300+
விற்பனைக்கு பிறகு சேவை வழங்க : 4000+
9. JTO- SDE-AGM அதிகாரிகள் ஒரே குரூப்பாக கருதப்பட்டு , பதவி உயர்வு
காலி இடங்களின் அடிப்படையில் அல்லாமல், திறமையானவர்களுக்கு
அடுத்த நிலைக்கு பதவி உயர்வு என்ற முறையை கையாள வேண்டும்.
10. STR போன்ற Mtce பணிகளை வெளியார் பணிக்கு விட வேண்டும்.
அதை மாநில நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
11. பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் வரையிலும் ERP திட்டம் முழுமையாக அமலாகும் வரையிலும் ஊழியர்களின் பணி செயல்பாட்டை அதிகப்படுத்துவது, அவர்களின் தனிப்பட்ட
செயலாக்கத்தின் அடிப்படையில் தரம் பிரிப்பதன் மூலம்.
12. செயலாக்கத்தின் அடிப்படையில் பணிக் கலாச்சாரத்தை மேம்படுத்துவது.
13. சரிபாதி ஊழியர்கள் உபரி என்ற அடிப்படியில் அவர்களுக்கான
ஊதிய செலவை அரசிடமிருந்து உதவியாக பெறுவது.
14. கேரள மாநிலத்தில் தற்போது உள்ள அளவீடுகளின் அடிப்படையில் தேவையான ஊழியர்களை கணக்கீடு செய்வது.
உதாரணத்திற்கு, தமிழ் மாநிலத்தில் தேவையான ஊழியர்கள்
தமிழ் மாநில அலுவலகம் :
T.Mech & RM = 34
TTA = 16
Sr.TOA = 60
--------
மொத்தம் = 110
---------
தமிழ் மாநில அனைத்து SSAகளுக்கும் :
T.Mech & RM = 3832
TTA = 524
Sr.TOAP = 675
--------
மொத்தம் = 5031
--------
மீதியுள்ள ஊழியர்கள் அளவீட்டிற்கு உட்படாத உபரி ஊழியர்களாக (supernumerary posts) கருதப்படுவார்கள்.
மார்கெட்டிங், விற்பனை, விற்பனைக்கு பிறகு அதை பராமரிக்க
மன நிறைவான உடனடி சேவை ஆகியவற்றில் கூடுதல் கவனம்
செலுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க
முடியாது.
அதற்காக,
* 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைத் தொடர்பு சேவையையே
தனது உயிர் மூச்சாக கருதி, இதை நிர்மாணிப்பதில், சேவையை விரிவாக்குவதில் அளப்பரிய பணியாற்றிய 50 சத ஊழியர்களை
உபரியாக, உதவாக்கரையாக அறிவித்திட வேண்டும் என்றும்
* MBA MCA படித்துவிட்டு தனது கல்வித் திறமைக்கு ஏற்ற பணி கிடைக்காததால் தனியார் துறையின் கடும் சுரண்டலுக்கு
ஆளாகும் இளைஞர்களை, BSNLம் அதேபோல சுரண்ட வேண்டும்
என்ற மனித நேயமற்ற அடிப்படையில் அமைந்துள்ள டெலாய்ட்டின் அறிக்கை கண்டனத்திற்குரியது.
No comments:
Post a Comment