கூகுள், யாஹூ-விற்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் களமிறக்கும் உலகத்தரம் வாய்ந்த புதிய 'இ-மெயில்' சேவை
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான
பி.எஸ்.என்.எல். முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய 'இ-மெயில்' சேவையை
அறிமுகப்படுத்துகிறது.
வரும் சனிக்கிழமை முதல் அறிமுகமாகவுள்ள இந்த 'இ-மெயில்' சேவையை
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த 'டேட்டா இன்போசிஸ்' ஐ.டி. நிறுவனம்
உருவாக்கிக் கொடுத்துள்ளது.
முதற்கட்டமாக, பி.எஸ்.என.எல் அறிமுகம் செய்யும் இந்த
'எக்ஸ்-ஜென் பர்சனல்' மற்றும் 'எண்டர்பிரைஸ்' இ-மெயில் சேவை பி.எஸ்.என்.எல்
'பிராட்பேண்ட்' இணையதள இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு
கட்டண முறையிலும் வழங்கப்படுகின்றன.
தற்போது கூகுள், யாஹூ, ரெட்டிஃப் போன்ற நிறுவனங்கள் வழங்கும்
இ-மெயிலில் இல்லாத பல புதிய வசதிகள் இதில் இருப்பதாக 'டேட்டா இன்போசிஸ்'
தெரிவித்துள்ளது. குறிப்பாக 'ரைட்ஸ் மேனேஜ்மண்ட்' என்ற வசதியில், இ-மெயில்
அனுப்புபவரே, அதை பெறுபவர் அந்த மெயிலை அழிப்பது, பார்வர்டு செய்வது, ரிப்ளை
மற்றும் பிரிண்ட் செய்வதை கட்டுப்படுத்த முடியும்.
அதேபோல் நாம் விரும்பிய நேரத்தில் அந்த மெயில் சென்றடையும்
வகையில் முன்னதாகவே 'ஷெடியூல்' செய்தும் அனுப்பலாம். எஸ்.எம்.எஸ்-ம் அனுப்ப
முடியும். அனைத்து மெயில் மற்றும் மெசேஜ்களும் சர்வரில் தானாகவே
சேமிக்கப்படுகின்றன. இதற்காக இலவசமாக 1 ஜி.பி. வரையிலான விர்ச்சுவல் ஸ்டோரேஜூம்
வழங்கப்படுகிறது. பயனாளர்கள் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெயில்கள் வரை அனுப்ப
முடியும்.
ஒவ்வொரு முறையும் மெயிலை 'லாக் இன்' செய்யும் போது பாஸ்வேர்டை
ஞாபகப்படுத்த தேவையில்லை. இதற்காக 'டூவல் ஆத்தென்டிகேஷன்' என்ற அதிக பாதுகாப்புடன்
கூடிய 'ஓ.டி.பி' (ஒன் டைம் பாஸ்வேர்டு) வழங்கப்படுகிறது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் இ-மெயில் சேவைகளுக்கு
பி.எஸ்.என்.எல்-ன் புதிய அறிமுகம் 'எக்ஸ்-ஜென்' ஒரு சவாலாக இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment