Sunday, 9 February 2014

ஓய்வுபெறும் வயது 65ஆக உயர்வு????


 சமீபத்தில் கூடிய பாராளுமன்ற குழு மத்திய அரசு 
 
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தலாம் 
 
என சிபாரிசு செய்துள்ளதாக அறிந்துள்ளோம். இதுபற்றி அரசு 
 
முடிவெடுக்கும்முன் இன்றைய வேலையில்லா திண்டாட்டம் 
 
எந்த அளவுக்கு இளைஞர்களை பாதித்துள்ளது என்பதனை 
 
கணக்கில் எடுக்கும் என நினைக்கிறோம். ஆனால் ஒரு 
 
தொழிற்சங்கம் என்றமுறையில் நாம் இதனை கடுமையாக 
 
எதிர்க்கிறோம்.அதுமட்டுமல்லாமல் மூன்று மற்றும் நான்காம் 
 
பிரிவு ஊழியர்களுக்கு உள்ள ஆளெடுப்புத் தடைச் 
 
சட்டத்தையும் திரும்பபெற வலியுறுத்துகிறோம்.  இதனால் 
 
30வருடங்களாக நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். அதேபோல 
 
காசுவல் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் 
 
என்ற கோரிக்கையும் எழுப்புவோம்.
 
தகவல்: NFTE காஞ்சி

 வங்கி ஊழியர்கள் நாளை முதல் 2 நாள் ஸ்டிரைக்

வங்கி ஊழியர்கள் நாளை முதல் 2 நாள் ஸ்டிரைக்


டெல்லி: நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் நாளை முதல் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. ஊதிய விகிதத் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதல் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களும் இந்த 2 நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே பணம் எடுப்பது, போடுவது ஆகிய பணிகள் ஸ்தம்பிக்கும்.

நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகளின் ஆயிரக்கணக்கான கிளைகளில் 8 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
                                         


 கூட்டுறவு சங்க கடன் இனி மேல் ஐந்து இலட்சம் !
மார்ச் 3 முதல் வழங்க இன்று கூடிய 

இயக்குனர்கள் குழு முடிவெடுத்துள்ளது.
4 இலட்சம் ரூபாய் முழுமையாக கடன்

 வாங்கியிருப்பவர்கள் மேற்கொண்டு ஒரு 

இலட்சம் ரூபாய் பெற்றுக்கொள்ளலாம்.
சங்க உறுப்பினர்களின் பொருளாதார 

தேவைகளை கணக்கில் கொண்டு மொத்த கடன் 

தொகையை 5 இலட்சமாக விரைந்து 

முடிவெடுத்து  உயர்த்திய 

கூட்டுறவு சங்க தலைவர்

தோழர் S.வீ ரராகவன் அவர்களுக்கு நன்றி! 

சேவைகள் தொடர வாழ்த்துகிறோம்!

Wednesday, 5 February 2014

BSNL MTNL இணைப்பு : மூன்று தினங்களில் யோசனைகளை  தெரிவிக்க நிர்வாகம் சங்கங்களுக்கு கடிதம் ! Click Here


04-02-2014 : Merger of BSNL and MTNL - meeting of Steering Group to look after various HR aspects of merger. F. No.-BSNL/20-2/SR/2014, Dated:-04-02-2014. Please send your views. 
                                                        



              
 
 மத்திய அரசு ஊழியர்க்கு ஏழாவது ஊதியக் குழு அமைப்பு :
   தலைவராக முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி திரு அசோக் 
                     
                    குமார் மாத்தூர் நியமனம்

2ஜி தொடர்பாக புதிய ஆதாரம்: பிரசாந்த் பூஷன் :

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களை 
சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் 
கூறியபோது, 2ஜி  தொடர்பாக திமுக ஆட்சியின்போது உளவுதுறை 
தலைவராக பணியாற்றிய ஜாபர்சேட்-சரத்ரெட்டி இடையே நடந்த புதிய 
உரையாடல் பதிவுகள் வெளியாகியுள்ளன. மேலும் ஜாபர்சேட்-கருணாநிதியின் 
நேர்முக உதவியாளர் சண்முகநாதன் இடையே நடந்த உரையாடலும் 
வெளியாகியுள்ளன. இந்த உரையாடல்களில் ரூ.200 கோடி வரை பணப்
பறிமாற்றம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 2ஜி வழக்கிலிருந்து 
கனிமொழியை காப்பாற்ற சதி நடந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

Tuesday, 4 February 2014

கனரா வங்கிக்கடன் நீட்டிப்பு 

BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன் வழங்குவதற்காக 
கனரா வங்கியுடன் 27/01/2014  அன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

01/12/2013 முதல் 31/12/2014 வரை உடன்பாடு அமுலில் இருக்கும்.

தனிநபர் கடன் அதிகபட்சம் 10 லட்சம் வழங்கப்படும்.
தற்போதைய தனிநபர்கடன் வட்டி விகிதம் 12.95 சதம் ஆகும்.

வீட்டுக்கடன் 75 லட்சம் வரை வழங்கப்படும்.
வட்டி விகிதம் 10.2 சதம் ஆகும்
விலைவாசி   4  புள்ளி  குறைந்துள்ளது.
நவம்பர் மாதம்  = 243
டிசம்பர் மாதம்  = 239

இது வரவிருக்கும் IDA வை பாதிக்கும். அல்லது குறையும்