Monday 30 December 2013




ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு: பரபரப்பு ஏற்படுத்தும் தகவல்










ஈரோடு : தமிழகத்தின், 'டாப் 16' அரசுத்துறை லஞ்ச அதிகாரிகள் பட்டியலை லஞ்சம் கொடதோர் அமைப்பினர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் .

ஈரோட்டில், கடந்த வாரம், பத்திரிகையாளர்களை சந்தித்த, தமிழ் மீட்சி இயக்கத்தினர், தமிழக அரசுத்துறையில், 'டாப் 16' லஞ்ச அதிகாரிகளின் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்தனர். இந்த அமைப்பு தன்னார்வ தொண்டு அமைப்பாகும். இதனால், அரசுத்துறை அதிகாரிகள் கலக்கமடைந்தனர்.நேற்று காலை, ஈரோட்டில் தமிழ் மீட்சி இயக்கத்தின் கலந்துரையாடல் கருத்தரங்க கூட்டம், மாநில செயலரும் சமூக ஆர்வலருமான நந்தகோபால் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தமிழகத்தின், 'டாப் 16' ஊழல் அரசுத்துறை அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டனர்.மாநில தகவல் ஆணையர்கள் சீனிவாசன், தமிழ்செல்வன், சென்னை பால் கூட்டுறவுத்துறை தணிக்கை இணைப்பதிவாளர் ஜவகர் பிரசாத்ராஜ், சென்னை மகளிர் மேம்பாட்டு திட்ட இணை இயக்குனர் ராதா, பெரம்பலுார் டாஸ்மாக் உதவி மேலாளர் கல்யாணி, கரூர், ஊரக வளர்ச்சித்துறை ஒன்றிய பொறியாளர் குமரேசன், தமிழக முதல்வர் தொகுதியை உள்ளடக்கிய திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெய ஸ்ரீ முரளிதரன், முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் முன்னாள் தாசில்தார் பவானி, உட்பட ஊழல் மற்றும் பணி நேர்மையற்ற அதிகாரிகள் 16 பேர் பட்டியலில் உள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணச்சநல்லுாரை சேர்ந்த சீனிவாசன். இவர், தனது கிராமத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான கருவேல மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.தகவல் உரிமை சட்டத்தில் பதில் கோரிய போது, 2,000 பக்கம், வெற்று தாள் அவருக்கு பதிலாக கிடைத்ததாக இங்கு தெரிவித்தனர்.தொடர்ந்து, கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளின் பட்டியலை வெளியிடப்போவதாக, தமிழ் மீட்சி இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Click Here

செய்தி: தினமலர் (30/12/2013)

No comments:

Post a Comment