Sunday 7 July 2013

nlc


என். எல்.சி., பங்குகள் தமிழகத்திற்கு வருகிறது !

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013,16:15 IST
புதுடெல்லி: என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் அளித்தது. இதன்படி இந்த பங்குகளை விற்க கூடாது என மாநில ஆளும் அரசு , எதிர்கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர், இதனை கண்டித்து ஸ்டிரைக் நடந்து வருகிறது.
இந்நிலையில் என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசே வாங்கிட விரும்புவதாக விருப்பம் தெரிவித்தது. இதனை பரிசீலித்த செபி தமிழக அரசுக்கு விற்கலாம் என மத்திய பங்கு விலக்கல் துறையினருக்கு பரிந்துரை செய்தது. இதனையடுத்து இந்த துறையினர் தமிழக அரசு இது தொடர்பாக ஒரு அதிகாரியை நியமிக்கலாம் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்றும் 3வது முறை முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக இருந்தால், தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் டிட்கோ, சிப்காட், டிக் போன்ற ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்யலாம் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்து செபி அமைப்பிடம், மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது.
இந்நிலையில், ஜெயலலிதா கோரிக்கை குறித்து பங்கு விற்பனை துறைக்கு செபி அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில், 'என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறைக்கு விற்பனை செய்யலாம்' என பரிந்துரைத்தது.

இந்நிலையில் மத்திய பங்குவிலக்கல் துறை தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை இன்று மதியம் அனுப்பியுள்ளது. இதில் பங்கு வாங்குவது தொடர்பாக தமிழக அரசு ஒரு அதிகாரியை நியமிக்கலாம் என்று கேட்டுள்ளது. இந்த அதிகாரி செபியுடன் பேச்சு நடத்துவார் தொடர்ந்து , என்.எல்.சி., பங்கு தமிழகத்திற்கே கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த விவகாரத்தில் தொழிற்சங்கங்கள் எந்த நிலையை எடுக்கும், என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
                                                                       from: dinamalar.com

No comments:

Post a Comment