Tuesday 23 July 2013

இந்திய நாட்டு தொழிலாளி வர்க்கத்தின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர் தோழர் சி.ராஜேஸ்வர ராவ் அவர்கள்.


ஜூன் 6, 1914ல் ஒரு மிகச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த அவர், காசி பெனாரஸ் இந்து பல்கலைக் பல்கலைக்கழகத்தில் படித்தார். 1931ல் விசாகப்பட்டினம்  மருத்தவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, படிப்பை உதறிவிட்டு சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.  மார்க்சீய கருத்துக்களால் ஈர்க்கபட்ட அவர் கோடிக்கணக்கான தனது சொத்துக்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்தார். இந்தியாவில் அந்நாளில் மிகவும் பிரசித்தி பெற்ற நிஜாமை எதிர்த்த தெலுங்கான ஆயுத போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். நெருக்கடியான கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக பொறுப்பேற்று 1964 முதல் 1989 வரை  அதை வழி நடத்தினார். கம்யூனிஸ்ட் கட்சியை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருமை அவரையே சாரும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். பல பொது துறை நிறுவனங்கள் உருவாகக் காரணமானவர்.அந்நாளிலேயே கலப்பு திருமணத்தை  ஊக்குவித்தவர்.1994ல் காலமானார். அவரது நூற்றாண்டு விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப் பட்டு அவரது அளப்பரிய தியாகமும் தொழிலாளி வர்க்ககம் சுரண்டலில் இருந்து விடுபட முதிர்ச்சி நிறைந்த செயல்பாடும் நினைவு கூறப்படுகிறது.           

      
தோழர் சி.ராஜேஸ்வர ராவ் நூற்றாண்டு விழா திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.


தோழர்கள் தா.பாண்டியன், சி.கே.மதிவாணன் ஆகியோர் பங்கேற்று தோழர் சி.ஆர் அவர்களின் நற்பண்புகளை தன்னலமற்ற   போராட்ட குணங்களை எடுத்துரைத்தனர்.

No comments:

Post a Comment