Saturday, 28 February 2015

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது தமிழ்மாநில மாநாடு இனிதே நிறைவு பெற்றது.
புதிய மாநிலச் செயலாளராக தோழர் இரா.முத்தரசன் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

 


இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நிறைவு பெறுவதையொட்டி விண்ணதிரும் கோஷத்துடன் துவங்கியது செம்படை பேரணி. 





 பொதுத்துறை நிறுவனமான BSNLஐ காக்க அனைத்து சங்கங்களும் 
17-03-15 அன்று  துவங்கவுள்ள 
வேலைநிறுத்த போராட்டத்திற்கு 
ஆதரவு தரும் தீர்மானத்தை 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில்முன்மொழிந்து உரையாற்றுகிறார் தோழர் C.K.M  
 

Sunday, 22 February 2015

Implead Petition by CKM
நியாயத்திற்காக இறுதிவரை  போராடும் குணம் படைத்த 
தோழர் மதிவாணன், சென்னை 323 தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் தன்னையும் ஒரு பிரதிவாதியாக சேர்க்க்வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

Dinamani

"தயாநிதி மாறன் மீதான விசாரணையை  விரிவுபடுத்துவது அவசியம்'

First Published : 21 February 2015 03:23 AM IST
      தயாநிதி மாறன் மீதான விசாரணையை சி.பி.ஐ. விரிவுபடுத்த வேண்டும் என, தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் மாநிலச் செயலரும், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்- அலுவலர்கள் போராட்டக் குழுத் தலைவருமான சி.கே. மதிவாணன் கூறினார்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:
 தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் 323 பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாகப் பெற்று, சன் டி.வி. பயன்பாட்டுக்கு அளித்ததால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ. 440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதை சி.பி.ஐ.தெளிவுபடுத்தி யுள்ளது. எனவே, சன் டி.வி. நிர்வாகத்திடமிருந்து ரூ.440 கோடியை அரசு வாங்கித் தர வேண்டும்.
சன் டி.வி. நிர்வாகத்தின் சேனல்கள் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் உள்ளன. எனவே, அங்கும் தயாநிதி மாறன் முறைகேடு செய்யாமல் இருந்திருப்பார் என நம்புவதற்கான முகாந்திரம் இல்லை. எனவே, சி.பி.ஐ. தனது விசாரணை வரம்பை விரிவு படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கில் எங்களது சங்கத்தைச் சேர்ந்தவர்களையும் ஒருதரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரழிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதை கண்டித்து, மார்ச் 17-ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளோம் என்றார்.
clip

Saturday, 21 February 2015

சென்னை ,தமிழ்நாடு NFTE(BSNL), தொழிலாளர் கல்விமையம் ,

NFTCL அமைப்புகளின் சார்பாக ,500 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள்

பங்கேற்ற தோழர் ,C K மதிவாணன் தலைமை தாங்கிய, மீத்தேன்

வாயு திட்டத்தை கைவிடக்கோரி,மாபெரும் தொடர் முழக்க 

போராட்டம், தஞ்சை மண்ணை அதிரவைத்தது ....

இந்த மக்களைக் காக்க, தஞ்சை மண்ணை காக்க நடந்த போராட்டத்தில் 

திருவண்ணாமலையின் சார்பில் தோழர்கள் இரா. செல்வராஜு மற்றும் 

தோழர் பொன். தேவராஜு கந்துகொண்டனர். 







            























Saturday, 14 February 2015

மண்ணில் மீண்டும் பிறப்பீர்களா எங்கள் அருமை குப்தாவே! எங்கள் மாசற்ற ஜெகன் அவர்களே!


Image result for gupta jagan nfte-bsnl
  
  எங்கள் ஆசான் அருமைத்தோழர் ஜெகன் அவர்கள் பல கூட்டங்களில் சொல்லக்  கேட்டுருக்கின்றேன்.

  "ஒரு மாபெரும் கூட்டம் நடந்தது,    ஒரு தோழன்,  காசுவல் ஊழியர்  எழுந்து அருமைத் தோழர் குப்தா அவர்களிடம் கேள்வி கேட்கின்றார்  " எங்களுக்கு என்ன செய்தது இந்த சங்கம் ",
   
    அருமைத் தோழர் குப்தா அமைதியாக விளக்குகின்றார் அந்த தோழருக்கு."  ஒரு மிகப்பெரிய சங்கத்தின்  சம்மேளனப்பொதுச் செயலரிடம்  கேள்வி கேட்கும் உரிமையை இந்த சங்கம் உங்களுக்கு கொடுத்துள்ளது".

    கேள்வி கேட்டதோ ஒரு காசுவல் ஊழியர்!

    பதிலுரைத்த தோழர் குப்தாவின் பாங்கை என்னவென்று உரைப்பது.

ஆனால்,  ஆனால்,  இன்றோ !    கேள்வி கேட்டால்? 

   குப்பையை தூக்கி எறி? என எகிறும் "காரை குடியான்" கள்.

  " 3 பேர் கேள்வி கேட்கிறான், எண்ணிக்கை சிறிது தான் அப்புறப் படுத்து"
    என திமிர் பேசும் கும்பகோணத்தாண் கள்,
   கோஷமிட்டால், ரவுடிகள் என விமர்சிக்கும் மறைமுக    எழுத்தாளர்   வேலூர் அந்துமணிகள். (தினமலரில் முகம் காட்டாத ஆசிரியர்).

   "மதுரைக்கு வந்தால் காலை  உடைப்பேன்" என திமிர் பேசும்
   மதுரைக்கார துணை அண்ணாச்சி,

   மனதில் மீண்டும் மீண்டும் ஆசை பிறக்கிறது,

மண்ணில் மீண்டும் பிறப்பார்களா எங்களது ஆசான்கள் குப்தாவும், ஜெகனும்.

From NFTE-CBT