மண்ணில் மீண்டும் பிறப்பீர்களா எங்கள் அருமை குப்தாவே! எங்கள் மாசற்ற ஜெகன் அவர்களே!
எங்கள் ஆசான் அருமைத்தோழர் ஜெகன் அவர்கள் பல கூட்டங்களில் சொல்லக் கேட்டுருக்கின்றேன்.
"ஒரு மாபெரும் கூட்டம் நடந்தது, ஒரு தோழன், காசுவல் ஊழியர் எழுந்து அருமைத் தோழர் குப்தா அவர்களிடம் கேள்வி கேட்கின்றார் " எங்களுக்கு என்ன செய்தது இந்த சங்கம் ",
அருமைத் தோழர் குப்தா அமைதியாக விளக்குகின்றார் அந்த தோழருக்கு." ஒரு மிகப்பெரிய சங்கத்தின் சம்மேளனப்பொதுச் செயலரிடம் கேள்வி கேட்கும் உரிமையை இந்த சங்கம் உங்களுக்கு கொடுத்துள்ளது".
கேள்வி கேட்டதோ ஒரு காசுவல் ஊழியர்!
பதிலுரைத்த தோழர் குப்தாவின் பாங்கை என்னவென்று உரைப்பது.
ஆனால், ஆனால், இன்றோ ! கேள்வி கேட்டால்?
குப்பையை தூக்கி எறி? என எகிறும் "காரை குடியான்" கள்.
" 3 பேர் கேள்வி கேட்கிறான், எண்ணிக்கை சிறிது தான் அப்புறப் படுத்து"
என திமிர் பேசும் கும்பகோணத்தாண் கள்,
கோஷமிட்டால், ரவுடிகள் என விமர்சிக்கும் மறைமுக எழுத்தாளர் வேலூர் அந்துமணிகள். (தினமலரில் முகம் காட்டாத ஆசிரியர்).
"மதுரைக்கு வந்தால் காலை உடைப்பேன்" என திமிர் பேசும்
மதுரைக்கார துணை அண்ணாச்சி,
மனதில் மீண்டும் மீண்டும் ஆசை பிறக்கிறது,
மண்ணில் மீண்டும் பிறப்பார்களா எங்களது ஆசான்கள் குப்தாவும், ஜெகனும்.
From NFTE-CBT
No comments:
Post a Comment