தயாநிதி மாறன் மீதான விசாரணையை
சி.பி.ஐ. விரிவுபடுத்த வேண்டும் என, தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனத்தின்
மாநிலச் செயலரும், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்- அலுவலர்கள் போராட்டக் குழுத்
தலைவருமான சி.கே. மதிவாணன் கூறினார்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த
காலத்தில் 323 பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாகப் பெற்று, சன் டி.வி.
பயன்பாட்டுக்கு அளித்ததால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ. 440 கோடி
வருவாய் இழப்பு ஏற்பட்டதை சி.பி.ஐ.தெளிவுபடுத்தி யுள்ளது. எனவே, சன் டி.வி.
நிர்வாகத்திடமிருந்து ரூ.440 கோடியை அரசு வாங்கித் தர வேண்டும்.
சன் டி.வி. நிர்வாகத்தின் சேனல்கள்
ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் உள்ளன. எனவே, அங்கும்
தயாநிதி மாறன் முறைகேடு செய்யாமல் இருந்திருப்பார் என நம்புவதற்கான
முகாந்திரம் இல்லை. எனவே, சி.பி.ஐ. தனது விசாரணை வரம்பை விரிவு படுத்துவது
தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கில் எங்களது சங்கத்தைச்
சேர்ந்தவர்களையும் ஒருதரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, உச்ச
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரழிக்கும் வகையில்
மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதை கண்டித்து, மார்ச் 17-ஆம் தேதி
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment