Sunday, 20 October 2013

ரூபாய் 34 லட்சத்திற்கு ஏலம் போன சென்னை லேண்ட் லைன் நம்பர் 20002000.

   ஏலம் எடுத்தவர் ரவி ட்ரேவல்ஸ், கோடம்பாக்கம் டாக்சி ஆபரேட்டர்.
------------------------------------------------------------------------------------------------------
                           
Chennai cab operator pays Rs 34 lakh for fancy BSNL landline number :

                    


CHENNAI: In the age of 3G, WiMAX and zero-cost mobile number portability, who wants afancy BSNL landline number? Many, apparently. The first public auction of BSNL landline numbers in the city saw some nail-biting moments and the end of it, a cab operator walked away with the number '20002000' after paying 33.93 lakh when the auction ended at 5pm on Thursday.

There were 16 people bidding for the number, which was put up for electronic auction by the public sector telecom operator since September 30. Ten of them competed on the last day of the bid, and five stayed on till the last minute, together clocking 156 bids. Ravi Travels, a taxi operator from Kodambakkam with more than 2,000 cabs, bagged the number at 4:59:33pm. The runner up, a real estate broker called 'Dial Nelam', quoted 30.1 lakh, barely five seconds earlier. The others placed their last bids with 46 seconds, 49 seconds and 56 seconds to go for the deadline.


S Jyothi Sankar, general manager (marketing), BSNL, said the auction was a game of skill and luck.

"Every second counted, as five bidders vied between 4.59pm and 5pm. At a time when many establishments and corporates are shifting their phone services to private operators, selling a fancy number for such a price is a major achievement for us," he said. Now, the service provider expects a monthly revenue of 3lakh from this number.

B Kumar, a manager with Ravi Travels said the company was happy to have the number. "We have won the bid; we will get the confirmation order on Monday," he said.The prized 20002000 is an ISDN (Integrated Services Digital network) number with a capacity to handle 30 outgoing and incoming calls simultaneously. While this is the first auction of a landline number in the country, BSNL has been selling fancy numbers for cell phone customers for quite some time. Interestingly, if Ravi Travels bagged the landline, the highest bid for a cell phone number was offered by Kerala-based businessman Ravi Pillai in July last year. He paid 12.13 lakh for the number that has zero as its last eight digits.

திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் 



                    ஒப்பந்த ஊழியர் சங்க (TMTCLU) திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 18- 10 - 2013 அன்று NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் T. பன்னீ ர் செல்வம் தலைமையில் நடைபெற்றது .


அதில் நமது  கடலூர் மாவட்ட  ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர்.ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் . NFTE திருச்சி மாவட்ட தலைவர், செயலர், பொருளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .




 TMTCLU  திருச்சி மாவட்டசெயலர் மில்டன் வரவேற்புரை  நிகழ்த்தினார் 




      நமது மாநிலச் துணை தலைவர் தோழர்.சுந்தரம்  நமது மாவட்டசெயலருக்கு  பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். 


                 கடலூர் தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் மாவட்டசங்க 

                                              வெப் சைட்டிலிருந்து



                                   சரண்டர் உடன்பாடு !

  புதிய அங்கீகார விதிகளின் படி தேர்தல் முடிந்தவுடன் 19-04-13 அன்று BSNLEU சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தேர்தல் முடிவு 
ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. இனி BSNLEU,  NFTE-BSNL ஆகிய இரண்டு அங்கீகாரச் சங்கங்களும் இணைந்து ஊழியர் பிரச்னை 
-களையும் நிறுவனம் சார்ந்த பிரச்னைகளையும் எடுக்க வேண்டும் 
என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  ஆனால் ஒரு சில மாதங்கள் கழித்து கூடிய அதன் முதன் செயற்குழுவிலேயே அதற்கு மாறான முடிவை எடுத்தது. 

போனஸ், NEPP எனும் அரைகுறை பதவி உயர்வு திட்டத்தில் 
உள்ள குறைபாடுகளை நீக்குதல், உள்ளிட்ட பிரச்னைகளை 
முன்வைத்து த்ன்னிச்சையாக 4-09-13 அன்று ஒரு நாள் வேலை
 நிறுத்தம் என்று முடிவெடுத்தது.  

சம்பிராயத்திற்குகூடஒன்றுபட்டு போராடலாம் என்று கடிதம்  எழுதவில்லை....

            டெல்லியில் நடந்த Revival Of BSNL கன்வென்ஷனில் 
NFTE-BSNL சார்பாக உரையாற்றிய அகில இந்திய துணைப் 
பொதுச் செயலர் தோழர் C.K. மதிவாணன் அவர்கள் இது பற்றி 
நாசூக்காக எடுத்துரைத்தும் பலன் ஏதுமில்லை.

அதற்கான காரணம், ஊழியர் பிரச்னையில் BSNLEU, நமது சங்கத்துடன் சேர்ந்து போராட விரும்பவில்லை..... 

நமது சங்கத்துடன் சேர்ந்து வெளிப்படையான  பேச்சுசுவார்த்தைக்கு
BSNLEU தயாரில்லை...

மேலும் இணைந்து போராடி நமது பிரச்னைகளில்  ஏதும் முன்னேற்றம் வந்து விட்டால் அதன் பெருமை புதியதாக அங்கீகாரம் பெற்ற NFTEக்கு போய்விடுமே என்ற அச்சம் ஒற்றுமைக்கு உலை வைக்கிறது.  ..

புதியதாக தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டது என்று ஆரவாரமாக அறிவிக்கப்பட்டது. 

உடனடியாக, நமது NFTE சங்கத் தலைமை, போனஸ் உட்பட தேங்கிக் கிடக்கும் அனைத்து ஊழியர் பிரச்னைகளையும் தொகுத்து ஊழியர் 
தரப்பு செயலர் அபிமன்யு அவர்களுக்கு அனுப்பியது.

  இதில் அநியாயமான அடாவடி என்னவென்றால், இது நாள் வரை அபிமன்யு நிர்வாகத்திற்கு agenda item எதையும் தரவில்லை.

ஆனால் நாம் கொடுத்த பிரச்னைகளை தன்னிச்சையாக போராட்ட கோரிக்கையாக மாற்றி விட்டார்....

அவற்றை வென்று இருந்தால் பாராட்டலாம்... ஆனால் அவற்றை நிர்வாகம் நிராகரிக்க வைத்து விட்டாரே...இந்த ணுகு முறையை 
கண்டிக்காமல் இருக்க முடியுமா ! 

அல்பமாக நடந்து கொண்டதை அம்பலமாக்காமல் இருக்க முடியுமா ?

18-10-13 அன்று நிர்வாகத்தை சந்தித்த நமது சங்கத் தலைவர்கள், 
நேஷனல் கவுன்சிலை உடனடியாக கூட்டச் சொல்லி நிர்வாகத்தை வலியுறுத்திய போதுதான் இந்த உண்மை வெளிவந்தது.   

 தொடர்ந்து  தள்ளி வைத்த போராட்ட கோரிக்கைகள் குறித்த இறுதி பேச்சு வார்த்தை 18-10-13 அன்று நடைபெற்றுள்ளது.

 ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன, 

ஆனாலும் அனைத்து சங்கங்களையும் அழைத்து ஒரு ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தாமல், பேச்சு வார்த்தையில் திருப்தி அடைந்து விட்டதாக கூறி BSNLEU போராட்டத்தை  காலவரையின்றி தள்ளி 
வைத்து விட்டது, BSNLEU மாறவேயில்லை என்பதை நிரூபிக்கிறது.

உதாரணத்திற்கு நிராகரிக்கப்பட்ட சில முக்கியான அம்சங்கள் :

 1. இவ்வாண்டும் மினிமம் போனஸ் கூட தர முடியாது

2. NEPP உத்திரவு வெளியான 23-3-2010க்கு முன்பு  போடப்பட்ட சராசரி 
   என்ற CR entryயை   NEPPக்கு  DPC கணக்கில்  எடுத்துக் கொள்ளக்
  கூடாது என்ற நியாயமான கோரிக்கை     நிராகரிக்கப்பட்டது.


3. பெரும்பான்மை RM/Group D ஊழியர்களை பாதிக்கும் Stagnation பிரச்னைக்கு     எந்த  தீர்வும் சாத்தியமில்லை

4.  LTC Medical Allowance மீண்டும் தர முடியாது.

 கோரிக்கைகள் rejected ,rejected என்று உள்ளதை எண்த்தான் முடியவில்லை ....  

ஒன்றுபட்டு போராடியிருந்தால் ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால் BSNLEUவின் One upman ship எனும் தான் ஏதோ தனித்து சாதித்து விட்டதாக காட்டவேண்டும் என்ற சுயநலபோக்கால் அது சாத்தியமில்லாமல் போயிற்று என்பதே யதார்த்தமான உண்மை 

தகவல்: NFTE கோவை

Saturday, 19 October 2013

               FLASH SOCIETY NEWS 

  இன்று (18-10-13) நடைபெற்ற இயக்குனர் குழுக் கூட்டத்தில் விழாக்
கால முன்பணம்  ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம்) வழங்க முடிவெடுக்கப்
பட்டது. 

   23-10-13 முதல் வழங்கப்படும்.

         மாதாமாதம் ரூ.1000/- பிடிக்கப்படும்.

                   

                தகவல் : தோழர் N. அன்பழகன், 
                    மாநில அமைப்புச் செயலர்,
                            NFTE-BSNL 
    BSNL டைரக்டர் (மனித வளம்) திரு. A.N.ராய்,  
சீனியர் அதிகாரிகளுடன்   CHQ தலைவர்கள் சந்திப்பு !

18.10.2013 அன்று முற்பகலில் டெல்லியில்   நமது அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர்,இஸ்லாம் அகமது, அகில இந்திய சங்க துனை பொதுச் செயலர் தோழர் C.K. மதிவாணன்  ஆகியோர் 
  திரு.A.N. ராய், டைரக்டர் (HR),மற்றும் திரு அகர்வால்.சீனியர் GM (Per), திரு.R.K.கோயல் Sr.GM (Estt), திரு சதீஷ் வாதா, DGM (SR)ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கீழ்க்கண்ட ஊழியர்களின் பிரச்னைகளை விவாதித்தனர்.

1. தீபாவளிக்கு முன்பாக குறைந்தபட்ச போனஸ் வழங்கவேண்டும் 
    என்று   வலியுறுத்தினர். 

2. தேசிய கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் :

       புதியதாக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்டி  ஊழியர் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும்.

3. கருணைப் பணி : இது குறித்து நிர்வாகம் வெளியிட்ட சில விளக்கங்கள்
    இறந்த  ஊழியர் குடும்பத்திற்கு பாதகமாக உள்ளது. ஆகவே அவை
    மாற்றப்பட வேண்டும்.

4. சென்னை TSM, கேசுவல் ஊழியர்களின் பிரச்னை சென்னை CAT 
    மற்றும்   உயர்நீதி   மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீர்க்கப்பட
    வேண்டும்   

5. கவுன்சில்கள் புதிய BSNL அங்கீகார விதிகளின்படி  அமைக்கப்பட 
    வேண்டும் .

6. ஊழியர் நல குழுக்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் வெல்பேர்  போர்டுகள் : 
    இரண்டு அங்கீகாரச் சங்ககளுக்கும் நியமன உறுப்பினர்கள்  1:1 விகிதாசாரத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

  கூட்டம் முடியும் போது மீண்டும் தீபாவளித் திருநாளுக்கு முன்பாக போனஸ் வாங்கிட வலியுறுத்தப்பட்டது. 

தகவல்: NFTE கோவை

Friday, 18 October 2013

இந்திய திரைப்பட நூற்றாண்டு தபால் முத்திரைகள் -

 கவிஞர் கண்ணதாசன் மற்றும்

 நடிகர் நாகேஷுக்கும் முத்திரை வெளியாகியுள்ளது.


நீரா ராடியா 'டேப்' வெளிப்படுத்தும் தகவல்களில் பெரும் முறைகேடு: சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு



அரசியல் தரகர், நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலில், பல விவகாரங்கள் உள்ளன. '2ஜி' விவகாரம் மட்டுமின்றி, அரசியல், கம்பெனி விவகாரங்கள் உட்பட பல முறைகேடுகள் தொடர்பான அம்சங்கள் அடங்கியுள்ளதால், அது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும், இடைத்தரகராக செயல்பட்டவர் நீரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளியாகி, அந்தப் பிரசனை வலுவடைந்ததும், நீரா ராடியாவின் பன்முகத் தொடர்பும், அதில் நடந்த விவாதங்களும், நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பின.நீதிபதி, ஜி.எஸ்.சிங்வி, நேற்று தன் உத்தரவில் கூறியதாவது: நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலின் சாராம்சத்தை பார்த்த மாத்திரத்தில், பெரும் முறைகேடு நடந்து இருப்பது தெரிகிறது. தனி நபர்கள், அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு, தங்களின் சுய லாபத்திற்காக, முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அறிய முடிகிறது. அரசு அதிகாரிகளுடன் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டது, வரம்பை மீறி, அளவுக்கு அதிகமாக சட்டத்தை தாண்டி செயல்பட, அதிகாரம் படைத்தவர்களின் தூண்டுதல் இருந்தது என்றும், இதில் உள்ள தகவல்கள் காட்டுகின்றன. கிரிமினல் செயல்கள் நடந்திருப்பதை இவை காட்டுகின்றன. சுரங்கம் குறித்த விஷயங்களை கனிம வளத்துறையும், மற்ற சில விஷயங்களை ஊழல் கண்காணிப்பு துறையும் ஆய்வு செய்ய வேண்டும். இதில் உள்ள நீதித்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை, தலைமை நீதிபதி முடிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம். மற்ற விஷயங்களில் அடங்கிய முறைகேடுகளை, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். இரண்டு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தொலைபேசி உரையாடல் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆவணங்களை, சிறப்பு குழு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக, சிறப்பு குழுவை விரிவுப்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
 இந்த வழக்கின் அடுத்த விசாரணை, டிசம்பர் 10ம் தேதி நடைபெறும். இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் கூறினார்.