Friday, 7 October 2016






2014-2015  ஆண்டிற்கான போனஸ் ரூ, 3000/- வழங்க  BSNL  ஆனை வழங்கியது.

Thursday, 6 October 2016

 
 
 
 
BSNL ஊழியர்களுக்கு மாதம் ரூ.200/-க்கு அலைபேசியில் இலவசமாகப் பேசும் வசதி தரப்பட்டிருந்தது. இதில் ரூ.50க்கு தனியார் தொலைபேசியில் பேசுவதற்கு வசதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வசதி செப்டம்பர் மாதத்திற்குப் பின் தரப்படவில்லை. மேற்கண்ட வசதியை ஊழியர்களுக்கு அளித்ததின் மூலம் BSNL பழுது நீக்கும் சேவை FRS மேம்பட்டுள்ளதா? என CORPORATE அலுவலகம்
 மாநில நிர்வாகங்களைக் கேட்டுள்ளது. 
மாநிலங்களில் இருந்து பதில் கிடைத்தபின்பு 
மேற்கண்ட வசதியை தொடருவது பற்றி முடிவெடுக்கப்படும்

Tuesday, 4 October 2016

BSNL நேரடி நியமன ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 
BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு வயது முதிர்வு 
ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தக்கோரி நீண்ட நாட்களாக 
நாம் நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தோம். 

தற்போது அந்த திட்டத்தை அமுல்படுத்த 
DOT 29/09/2016 அன்று   ஒப்புதல் அளித்துள்ளது.  

DAவுடன் கூடிய அடிப்படைச்சம்பளத்தில் 
3 சதம் BSNL மாதந்தோறும் பங்களிப்பு செய்யும். 

இந்த நிதியைக் கையாளுவதற்காக 
தனி அமைப்பு ஏற்படுத்தப்படும். 

BSNL வாரியம்  ஒப்புதல் அளிக்கும் தேதியில் 
இருந்து இது அமுல்படுத்தப்படும். ஜனவரி 2017ல் இருந்து நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அமைப்புகளிடம் இருந்தும்  
BSNL  ஒப்புதல் பெற்றுக்கொள்ள வேண்டும். 

தற்போதைய சம்பள நிலவரப்படி குறைந்தபட்ச பங்களிப்பு  
மாதம் ரூ.900/= என்ற அளவில் இருக்கும். 

நன்றி: காரைக்குடி NFTE
மணமுறிவு  DIVORCE  பெற்று பெற்றோர்களை நம்பி வாழும் 
பெண் பிள்ளைகளை BSNL MRS  மருத்துவத்திட்டத்தில்   சேர்த்துக்கொள்ளலாம் என CORPORATE அலுவலகம் விளக்கமளித்துள்ளது. மணமுறிவு பெற்ற பெண் பிள்ளைகள் 
தாய் தந்தையருக்குப்பின் குடும்ப ஓய்வூதியத்தையும் பெற தகுதியுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
================================================
சாமியார் இராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதப் பொருட்களுக்கான செலவை    BSNL மருத்துவத் திட்டத்தின்  மூலம் ஈடு கட்ட இயலாது 
என BSNL  நிர்வாகம் அறிவித்துள்ளது.
================================================
JAO தேர்வில் வெற்றி பெற்ற சில தோழர்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்களது பதவி உயர்வை மறுத்துள்ளனர். அத்தகைய காலியிடங்களில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றுள்ள மற்றைய தோழர்களுக்கு வாய்ப்பளிக்க BSNL  நிர்வாகத்தை நமது மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
================================================
24/09/2016 அன்று நடைபெற்ற JTO இலாக்காத்தேர்வில் பொருத்தமற்ற  தவறான  சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அத்தகைய கேள்விகளுக்கு முழு மதிப்பெண் அளிக்க நிர்வாகத்தை 
நமது மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
================================================
JTO பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டு விட்டது.
 ஆனால் JAO பயிற்சி வகுப்பு பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இதனிடையே JAOவாகத்  தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளிக்க முயற்சிகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்காலிகப் பதவி உயர்வால் எந்தப்பயனும் இல்லை. தேர்ச்சி பெற்ற தோழர்களை உடனடியாக பயிற்சிக்கு அனுப்புவதே சரியானதாகும்.
 
தகவல்: காரைக்குடி NFTE

Sunday, 2 October 2016

ஒப்பந்த ஊழியர் VDA
விலைவாசிப்படி உயர்வு

01/10/2016 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 
VDA  விலைவாசிப்படி 
கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.
UNSKILLED LABOUR 

A பிரிவு நகரம்
ரூ.368/- லிருந்து ரூ.374/= ஆக 6 ரூபாய் நாளொன்றுக்கு உயர்வு 

B  பிரிவு நகரம் 
ரூ.307/- லிருந்து ரூ.312/= ஆக 5 ரூபாய் நாளொன்றுக்கு உயர்வு

C  பிரிவு நகரம் 
ரூ.246/- லிருந்து ரூ.250/= ஆக 4 ரூபாய் நாளொன்றுக்கு உயர்வு
 
 தகவல்: காரைக்குடி NFTE