தரைவழித் தொலைபேசியில் இரவு நேர அழைப்புகள் இலவசம் பி.எஸ்.என்.எல்.By dn, புது தில்லி
First Published : 23 April 2015 05:06 PM IST
நாடு முழுவதிலுமுள்ள அனைத்து நிறுவன தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கு , இரவு நேரத்தில் தங்களது நிறுவனத் தரை வழித் தொலைபேசி மூலம் அழைக்கும் சேவையை மே 1ஆம் தேதியிலிருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது.இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எங்களது தரைவழித் தொலைபேசி மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து செல்லிடப்பேசி, தொலைபேசி நிறுவனத்திற்கும் மேற்கொள்ளும் இரவு நேர அழைப்புகளை,மே 1ஆம் தேதியிலிருந்து இலவச அழைப்பு சேவையாக பி.எஸ்.என்.எல் வழங்க உள்ளது.இந்தத் திட்டத்தின்படி பி.எஸ்.என்.எல். நிறுவன தொலைபேசியிலிருந்து இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணிவரை மேற்கொள்ளும் அழைப்புகள் இலவச அழைப்பாக வழங்கப்படும்.
கிராமம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில், தரைவழித் தொடர்பு சேவையில் இணைப்பு பெறப்பட்ட குறிப்பிட்ட திட்டங்களில், தரைவழித் தொடர்பு சிறப்புத் திட்டங்கள், அகல அலைவரிசை இணையத்துடன் கூடிய தரைவழித் தொடர்பு திட்டங்கள் என அனைத்து வகையான திட்டங்களும் இரவு நேர இலவச அழைப்பு சேவைத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப் படுகிறது என்று அந்த பி.எஸ்.என்.எல். அதிகாரி தெரிவித்தார்.