Tuesday, 30 April 2013

மே தின வாழ்த்துகள்

உலகில்  செல்வங்கள் 
உருவாக காரணமான 
பிரம்மாக்கள் கொண்டாடும் 
ஒரே  விழா. 
ஒரு நாள் 
நிச்சயம் விடியும்! 
உழைப்பவர் தலைமையில் 
அமையும் ஆட்சி! 
இல்லாமை, கல்லாமை 
இல்லாமல் போகும். 
வாழ்த்துகள்!!
நன்றி: ஈரோடு வலைதளம்

மே தினம் சில பதிவுகள்!

தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
ரஷ்யாவில் மே தினம்
முதல் மே நாளின் போது உருசியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டி
சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில்
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.
சிக்காகோ பேரெழுச்சி
மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் கறுப்பு தினம்
நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
அனைத்து நாடுகளிலும் மே தினம்
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.
இந்தியாவில் மே தினம்
இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

நன்றி: திருச்சி வலைதளம்

Saturday, 27 April 2013

NFTE  சங்க அங்கீகாரம்:

BSNLEU சங்கத்தை
அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கமாகவும் NFTE
 சங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது சங்கமாகவும் அறிவித்து BSNL நிர்வாகம் 25/04/2013 அன்று உத்திரவிட்டுள்ளது. அங்கீகார காலம் 25/04/2013 முதல் 24/04/2016 வரை மூன்று ஆண்டுகள் கீழ்க்கண்ட தொழிற்சங்க வசதிகள் இரண்டு சங்கங்களுக்கும் பொருந்தும்.
BSNLEU சங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கமாகவும் NFTE
சங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது சங்கமாகவும் அறிவித்து BSNL நிர்வாகம் 25/04/2013 அன்று உத்திரவிட்டுள்ளது. அங்கீகார காலம் 25/04/2013 முதல் 24/04/2016 வரை மூன்று ஆண்டுகள் கீழ்க்கண்ட தொழிற்சங்க வசதிகள் இரண்டு சங்கங்களுக்கும் பொருந்தும்.1.தகவல் பலகை 2.வசதி 3.சங்கப்பொறுப்பாளர்களுக்கான மாற்றல் (Immunity Transfer )4.கூட்டாலோசனைக்குழுவில் பிரதிநிதித்துவம் - JCM 5.முறைப்படுத்தப்பட்ட கூட்டங்கள் Formal Meetings 6.சிறப்பு சிறு விடுப்பு - SPECIAL CASUAL LEAVE7.சந்தாப்பிடித்தம் 8.நிர்வாக
உத்திரவுகளின் நகல்களை அளித்தல்.

Saturday, 20 April 2013

NFTE   வெற்றி பெற்றதாக அறிவிக்கும் CRO கடிதம்
No. BSNI/Sr.GM(TS)/CRO/2013
Dated the, 18
th April, 2013
To
Shri R.K. Upadhyay,
Chairman-cum-Managing Director,
Bharat Sanchar Nigam Limited,
New Delhi.
Sub: Results of 6
th membership verification conducted through secret ballot under
the provisions of BSNL Recognition of Non-Executives' Unions and
Representation in the Councils Rules, 2012 for electing majority
representative union(s) of non-executive employees in BSNL - regarding
Sir,
The undersigned was appointed as Chief Returning Officer for conducting 6th
membership verification through secret ballot for electing majority representative
union of non-executive employees in BSNL vide letter no. BSNL/5-1/SR/2012 dated
4thJanuary, 2013. The Polling was conducted on 16thApril, 2013 through secret ballot
throughout the country in a peaceful manner.
2. The counting of votes was done on 18thApril, 2013. On the basis of information
received from all the Circles, consolidated information relating to votes polled and
secured by all the 18 participating unions is furnished in the enclosed Annexure. It
may be worthwhile to mention that by virtue of securing 99,380 votes, i.e. 48.6% of
total votes, BSNL Employees Union has emerged the largest union whereas NFTE
BSNL is the second-largest union by securing 61,915 votes, i
.e. 30.28%of total votes in
the membership verification.

        Sd/-
(Shameem Al<htar)
Sr. GM (TS),
% CGM, NTR ND &
CHIEF RETURNING OFFICER
End: Union-wise consolidated polling result
வென்றது
யார்?
தோழர் அபிமன்யு தன்னுடைய வெப் சைட்டில் 23/03/2013 ஒரு கட்டுரை எழுதினார். அதில் BSNLEU சங்கம் 1,14,534 மெம்பர்களை வைத்திருப்பதால் 51 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் வாங்கி ஒரே சங்கமாக வந்துவிடுவோம் என்று கூறியுள்ளார். அந்தோ பரிதாபம் அவர் வாங்கிய ஓட்டுகள் 99,380 மட்டுமே. இதிலிருந்து BSNLEU-வின் 15,154 மெம்பெர்கள் அச்சங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என தெரியவருகிறது.
அவருடைய கூற்றுபடி பார்த்தால் NFTE 45,000 மெம்பெர்களைத்தான் வைத்துள்ளது. ஆனால் வாங்கிய ஓட்டுகள் 61,915. இந்த கணக்குபடிப் பார்த்தால் மற்ற சங்கங்களிருந்தும் (BSNLEU உட்பட) NFTE க்கு சுமார் 16,915 பேர் ஓட்டு போட்டு உள்ளனர். இதிலிருந்து உண்மையாக யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிய வருகிறது.
அதேபோல அவர் கொடுத்த புள்ளிவிபரப்படி சென்னை தொலைபேசியில் BSNLEU 3262 மெம்பெர்களை வைத்திருந்தும் பெற்ற ஓட்டுகளோ 3041 மட்டுமே.இதிலிருந்து சுமார் 200 BSNLEU மெம்பெர்கள் அச்சங்கத்திற்கு ஓட்டளிக்கவில்லை என்பதும் தெரிகிறது. அதுவும் பணம், D.M.K ஆதரவு பத்திரிக்கை மூலம் பொய்ப் பிரச்சாரம் இவைகளை புறந்தள்ளி நமக்கு வாக்களித்துள்ளனர். இதன் மூலம் சென்னை தொலைபேசியில் NFTE சங்கம் தன்னுடைய மெம்பர்களைவிட அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.
இப்போது தெரிகிறதா யார் வெற்றி பெற்றது என்று?
நன்றி: சென்னை தொலைபேசி மாநிலச்சங்கம்

Thursday, 18 April 2013


Final Result of 6th Member Verification

NFTE-BSNL     =  61,195 VOTES (30.28%)

BSNLEU                 =  99380 VOTES (48.60%)

FNTO                       =  14,088 VOTES (6.89%)

எந்த சங்கமும் 51% வாக்குகள் பெறவில்லை.

எனவே அதிக் வாக்குகள் பெற்ற BSNLEU முதல் சங்கமாகவும், 

அதற்க்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்ற NFTE-BSNL 

இரண்டாவது  சங்கமாகவும் அங்கீகாரம் வழங்கப்படும் என்று 

எதிர்பார்க்கபடுகிறது.

வேலூர் மாவட்டத்தில் முதல் சங்கமாக NFTE சங்கத்தை தேர்ந்தெடுத்து வாக்களித்த நல் உள்ளங்களுக்கு திருவண்ணாமலை கிளையின் சார்பில் நன்றி! நன்றி!! நன்றி!!!

தமிழ் மாநிலத்தில் NFTE சங்கத்தை முதல் சங்கமாக தேர்ந்தெடுத்து வாக்களித்த நல் உள்ளங்களுக்கு திருவண்ணாமலை கிளையின் சார்பில் நன்றி! நன்றி!! நன்றி!!!
TAMIL NADU RESULT
SSA NFTE BSNLEU
CBT 586 1022
CDL 528 283
CGM(O) 225 184
CON 47 176
DPI 70 309
ERD 392 521
KKD 274 77
KMB 378 96
MA 585 797
NGC 116 280
PY 154 164
SLM 696 584
TNJ 572 116
TR 741 454
TT 183 224
TVL 369 315
VGR 234 256
VLR 772 310
TOTAL 6922 6168

NFTE WIN BY 754 VOTES

NFTE WIN IN 6 CIRCLES

1.BHIKAR,
2.TAMIL NADU,
3.CHATISKAR,
4.JARKAND,
5.NTR
6.JAMMU & KASHMIR
First Victory to NFTE!
1. NFTE Won in STP SSA under Chennai Telephones Circle.

2. NFTE Won in STR SSA under Chennai Telephones Circle.
3.NFTE Won at Richai TF.

4.NFTE Won at Jabalpur TF.

5.NFTE won at Arra, Motihari, Bettiah (Bihar), Ranchi, and Farrukhabad (UPE).

NFTE WON IN VELLORE SSA  
NFTE ..............   772        
BSNLEU .........  310

NFTE WON  IN KARAIKUDI SSA (TAMIL NADU)

IN KUMBAKONAM SSA   NFTE  WON
NFTE...............378
BSNLEU ........   96

NFTE WON IN THANJAVUR SSA
NFTE ...........  572
BSNLEU .......116

NFTE WON CGM(O) CHENNAI
NFTE...........225
BSNLEU .....184

NFTE WON TRICHY SSA
NFTE ..........741
BSNLEU .....454

NFTE WON IN THIRUNELVELI SSA
NFTE .........369
BSNLEU ....315

Sunday, 7 April 2013

மராட்டியத்திலும் NFTE-BSNL + SEWA BSNL  கூட்டணி !
  SC-ST ஊழியர்க்கு 8 ஆண்டுகளாக துரோகம் இழைப்போருடன் கூட்டணி கூடாது என்று கிளர்ந்தெழுந்து மராட்டிய மாநில SEWA BSNL, NFTE-BSNLக்கு ஆதரவு தர உடன்பாடு கண்டுள்ளது வரவேற்கத்தக்கது.  
04 April  2013

It is mutually agreed between SEWA MAHARASHTRA CIRCLE BRANCH and NFTE to work together and support NFTE MAHARASHTRA CIRCLE BRANCH in forthcoming 6th member verification.
   From Maharashtra Web site

Logo

Sibal seeks PM's intervention to revive BSNL and MTNL

BSNL MTNL நிறுவனங்கள் நலிவடையாமல் 

தடுக்க, பிரதமர் தலையிட்டு உடனடியாக 


 நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்


 கபில் சிபல் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

                                       புளுகுப் பிரச்சாரம்

NFTE BSNL CHENNAI

நல்ல செய்தி ஆந்திராவிலிருந்து !!!

ஆந்திர மாநிலத்தில் 20 மாவட்டங்களில் உள்ள SCST ASSOCIATION தோழர்கள் நமது NFTE உடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளில் SC/ST தோழர்களுக்கு இழைத்த அநீதிகளையும்,NEPP பதவி உயர்வில் BSNLEU சங்கம் இழைத்த துரோகங்களையும் தொழிலாளர்களிடம் உணர்வு பூர்வமாக விளக்கி வருகின்றனர். 
NFTE ஆந்திர மாநிலத்தில்  பெரு வாரியாக வெற்றி வாகை சூடும்.

  தகவல்:     ஆந்திர மாநிலத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தோழர் CK மதிவாணன், அகில இந்திய துணைப்பொதுச்செயலர், நெல்லூரி 
லிருந்து.

நன்றி: NFTE கோவை

Thursday, 4 April 2013

BSNL தொழிற்சங்க அங்கீகார தேர்தல் :
             
         கோவையில் எழுச்சிமிகு பிரச்சாரக் கூட்டம் !

மாவட்டத் தலைவர் தோழர் ஸ்ரீதரன் தலைமையில் 03-04-13 அன்று 350க்கும் மேற்பட்ட தோழர்களும்  தோழியர்களும் திரளாக பங்கேற்க மெயின் தொலைபேசி நிலையத்தில் காலை 10 மணிமுதல் முற்பகல் 2 மணிவரை எழுச்சியுடன் நடைபெற்றது.

  மாவட்டச் செயலர் தோழர்.N. ராமகிருஷ்ணன், பங்கேற்ற அனைவரையும் மனமுவந்து வரவேற்றார். 

நமது தேர்தல் அலுவலகம் மைய தொலைபேசி நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு,
நமது மாநில துணைத்தலைவர் தோழியர் திருமதி பரிமளம் அவர்கள்
பலத்த பட்டாசு வெடி முழங்க, தோழர் சுப்பராயன் அவர்களின்
அனல் பறக்கும் கோஷத்துடன் திறந்து வைத்தார்.
  தோழர் குப்தா அவர்களின் திரு உருவப்படத்திற்கு தோழர்கள்
C.K.மதிவாணன், ஜி. ஜெயராமன், பரிமளம் ஆகியோர்  மலரஞ்சலி
செய்தனர்.


சம்மேளனச் செயலர் தோழர் G.ஜெயராமன் துவக்கவுரையாற்றும்போது, கடந்த எட்டு ஆண்டுகளில் அங்கீகார BSNLEU சங்கம் ஊழியர்க்கு எந்த பயனையும் பெற்றுத் தராதது மட்டுமல்ல ! NFTE சங்கம் பெற்றுத் தந்த போனஸ், மருத்துவப் படி, LTC, LTC லீவ் என்கேஷ்மெண்ட் ஆகியவற்றை யும் சரண்டர் செய்ததை தனக்கே உரிய இலக்கிய பாணியில்  
விளக்கினார்.

    சங்கத்தின் அகில இந்திய துணைப்  பொதுச் செயலர் தோழர் சி.கே. மதிவாணன் நீண்டதொரு விளக்கவுரை ஆற்றினார்.

6வது அங்கீகாரத் தேர்தல், முதன்முறையாக புதிய BSNL அங்கீகார விதிகளின் அடிப்படையில் நடைபெறுகிறது. அதற்கு சென்னை தொலைபேசி மாநில சங்கம் 2004 முதல் எடுத்த முயற்சிகள், இந்திய கம்யூ. கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தோழர் குருதாஸ் குப்தா அவர்களின் வலியுறுத்தல் ஆகியவற்றை முழுமையாக விளக்கினார்.  1979லிருந்து நாம் பெற்று வந்த போனஸை நம்பூதிரி சரண்டர் செய்ததை விளக்கினார். நஷ்டத்தில் வந்தால் போனஸ் கிடையாது என்று BSNLEU போட்ட உடன்பாட்டை கடுமையாக சாடினார். நஷ்டத்தில் இயங்கும் அஞ்சல் துறையில் போனஸ் பட்டுவாடா ஆகும்போது, அதே துறையைச் சார்ந்த BSNL ஊழியர்க்கு மட்டும் போனசை மறுப்பது அநியாயம் என்று அறுதியிட்டு கூறினார். நிர்வாகம் வெளியிட்ட லாப நஷ்டக் கணக்கு மோசடியானது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கிய அவர், நிர்வாகத்தை த்ட்டிக் கேட்க BSNLEU தவறியதை அம்பலமாக்கினார்.

1-10-2007 முதல் 78.2 IDA அடிப்படையில் ஊதிய நிர்ணயப் பலனை பெறத் தவறியதால் ஊழியர்க்கு கடந்த 5 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள இழப்பை கணக்கிட்டு காட்டினார்.   

Top 10ல் இருந்த BSNL நிறுவனத்தை தயாநிதி மாறன், ராசா போன்ற அமைச்சர்கள், தனியார் கம்பெனிகளுக்கு  சலுகைகளைக் காட்டிவிட்டு அரசு நிறுவனமான BSNLஐ நலிவு நிறுவனமாக மாற்ற வைத்தபோது, அந்த ஊழல் அமைச்சர்களுக்கு நற்சான்றிதழ் கொடுத்த BSNLEUவின் துரோகத்தை அமபலமாக்கினார்.

தான் நாடெங்கும் கடந்த ஒரு மாதமாக  சுற்றுபயணம் மேற்கொண்ட போது, நாடெங்கும் சரண்டர் சங்கமான BSNLEUவிற்கு எதிராக அலை வீசுவதை விளக்கினார்.  NFTE வென்று மீண்டும் போனஸை பெறும் என்று அறுதியிட்டு கூறினார்.

மாநில சங்க துணைத் தலைவர் தோழியர் T. பரிமளம், சிறப்பாக உரையாற்றினார்.  மகளிர் பிரச்னைகளில் நமது சங்கம் எடுத்த முன் முயற்சிகளை விளக்கிய அவர், மதுரை  சொல் வழக்குப்படி, BSNLEUவிற்கு சங்கு ஊதப்பட்டுவிட்டது என்று பலத்த கரவொலிக்கிடையே கூறினார்.

நமது அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் எஸ்.எஸ்.கோபால கிருஷ்ணன் அவர்களின் நிறைவுரையோடு கூட்டம் முடிவுற்றது. 






நன்றி: NFTE கோவை

Tuesday, 2 April 2013

, இன்ஷுரன்சை விட கூடுதலான சம்பளத்தில் BSNLEU -வின் பங்கு என்ன ?வங்கி ஊழியர்களைக் காட்டிலும் இன்று BSNL ஊழியர்கள் கூடுதலாக சம்பளம் பெறுகிறார்கள் என பட்டியலிட்டு மகிழ்கிறார் தோழர் அபிமன்யூ. அப்படி ஒரே ஒரு மகிழ்ச்சியாவது அவருக்கு தேவைதான். உடன்பாட்டின் அடிப்படையில் 01.11.2007 முதல் 31.12.2012 வரை ஐந்தாண்டுகள் வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உடன்பாடு அமுலில் இருந்தது. 01.01.2007 முதல் BSNL ஊழியர்களுக்கான ஊதியம் அமுலில் உள்ளது. அது 2017 வரை நீடிக்கும். 01.01.2013 முதல் வங்கி ஊழியர்களுக்கு 10வது ஊதிய உடன்பாட்டின்படி புதிய ஊதியம் கிடைக்கும். அது இன்று அவர்கள் வாங்கு வதைக் காட்டிலும், நாம் இன்று பெற்று வருவதைக் காட்டிலும், கூடுதலாக இருக்கும். ஆகவே தோழர் அபிமன்யூவின் மகிழ்ச்சி சிறிது காலம் மட்டுமே இருக்கும். 2017 இல் மீண்டும் BSNL ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் ஏற்படும். 2018 இல் வங்கி ஊழியர்கள் புதிய சம்பளம் பெறுவார்கள் அப்போதும் அவர்கள் நம்மை விட கூடுதலாகப் பெறுவார்கள். எனவே இன்று நாம் கூடுதலாகப் பெறுகிறோம் என்பதில் எந்த பெருமையும் இல்லை. உண்மையில் வங்கி ஊழியர்கள் பெறாத மருத்துவப்படியை மூன்று மாதத்திற்கு ஒரு முறை பெற்று வந்தோம். இன்று அதை இழந்துள்ளோம் அதுவும் தோழர் அபிமன்யூவின் அங்கீகார காலத்தில். LTC, விடுப்பைக் காசாக்குவது, இன்செண்டிவ், போனஸ் ஆகியவற்றை இழந்து விட்டோம். இவைகளை இழக்காமல் இருந்திருந்தால் நாம் எப்போதும் வங்கி ஊழியர்களைக் காட்டிலும் கூடுதலாகப் பெற்றுக் கொண்டிருப்போம். அங்கீகார சங்கத்தின் நல்ல தூக்கத்தினால் ஏராளமாக இழந்து விட்டோம். அது தொடராது இருக்க, இழந்தவைகளை மீட்டிட வாக்களிபோம் NFTE க்கு வளமான வாழ்வு
காண்போம்!
நன்றி: NFTE ஈரோடு வலைதளம்,