Sunday, 9 February 2014


 வங்கி ஊழியர்கள் நாளை முதல் 2 நாள் ஸ்டிரைக்

வங்கி ஊழியர்கள் நாளை முதல் 2 நாள் ஸ்டிரைக்


டெல்லி: நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் நாளை முதல் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. ஊதிய விகிதத் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதல் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களும் இந்த 2 நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே பணம் எடுப்பது, போடுவது ஆகிய பணிகள் ஸ்தம்பிக்கும்.

நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகளின் ஆயிரக்கணக்கான கிளைகளில் 8 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
                                         


 கூட்டுறவு சங்க கடன் இனி மேல் ஐந்து இலட்சம் !
மார்ச் 3 முதல் வழங்க இன்று கூடிய 

இயக்குனர்கள் குழு முடிவெடுத்துள்ளது.
4 இலட்சம் ரூபாய் முழுமையாக கடன்

 வாங்கியிருப்பவர்கள் மேற்கொண்டு ஒரு 

இலட்சம் ரூபாய் பெற்றுக்கொள்ளலாம்.
சங்க உறுப்பினர்களின் பொருளாதார 

தேவைகளை கணக்கில் கொண்டு மொத்த கடன் 

தொகையை 5 இலட்சமாக விரைந்து 

முடிவெடுத்து  உயர்த்திய 

கூட்டுறவு சங்க தலைவர்

தோழர் S.வீ ரராகவன் அவர்களுக்கு நன்றி! 

சேவைகள் தொடர வாழ்த்துகிறோம்!

Wednesday, 5 February 2014

BSNL MTNL இணைப்பு : மூன்று தினங்களில் யோசனைகளை  தெரிவிக்க நிர்வாகம் சங்கங்களுக்கு கடிதம் ! Click Here


04-02-2014 : Merger of BSNL and MTNL - meeting of Steering Group to look after various HR aspects of merger. F. No.-BSNL/20-2/SR/2014, Dated:-04-02-2014. Please send your views. 
                                                        



              
 
 மத்திய அரசு ஊழியர்க்கு ஏழாவது ஊதியக் குழு அமைப்பு :
   தலைவராக முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி திரு அசோக் 
                     
                    குமார் மாத்தூர் நியமனம்

2ஜி தொடர்பாக புதிய ஆதாரம்: பிரசாந்த் பூஷன் :

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களை 
சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் 
கூறியபோது, 2ஜி  தொடர்பாக திமுக ஆட்சியின்போது உளவுதுறை 
தலைவராக பணியாற்றிய ஜாபர்சேட்-சரத்ரெட்டி இடையே நடந்த புதிய 
உரையாடல் பதிவுகள் வெளியாகியுள்ளன. மேலும் ஜாபர்சேட்-கருணாநிதியின் 
நேர்முக உதவியாளர் சண்முகநாதன் இடையே நடந்த உரையாடலும் 
வெளியாகியுள்ளன. இந்த உரையாடல்களில் ரூ.200 கோடி வரை பணப்
பறிமாற்றம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 2ஜி வழக்கிலிருந்து 
கனிமொழியை காப்பாற்ற சதி நடந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

Tuesday, 4 February 2014

கனரா வங்கிக்கடன் நீட்டிப்பு 

BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன் வழங்குவதற்காக 
கனரா வங்கியுடன் 27/01/2014  அன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

01/12/2013 முதல் 31/12/2014 வரை உடன்பாடு அமுலில் இருக்கும்.

தனிநபர் கடன் அதிகபட்சம் 10 லட்சம் வழங்கப்படும்.
தற்போதைய தனிநபர்கடன் வட்டி விகிதம் 12.95 சதம் ஆகும்.

வீட்டுக்கடன் 75 லட்சம் வரை வழங்கப்படும்.
வட்டி விகிதம் 10.2 சதம் ஆகும்
விலைவாசி   4  புள்ளி  குறைந்துள்ளது.
நவம்பர் மாதம்  = 243
டிசம்பர் மாதம்  = 239

இது வரவிருக்கும் IDA வை பாதிக்கும். அல்லது குறையும்

Friday, 17 January 2014

காம்ரேட் P.L.துவாவுக்கு அஞ்சலி:


காம்ரேட் P.L.துவாவுக்கு அஞ்சலி


      நமது அகில இந்திய சங்க பொருளாளர் தோழர் P.L.துவாஅவர்கள் இன்று (17-01-2014)அதிகாலை இயற்கை எய்தினார்.  அவருக்கு நமது கொடிதாழ்த்தி அஞ்சலி செய்கின்றோம்.தோழர் துவா அவர்கள் நமது தந்தி பிரிவில் பணியாற்றிNFPTE மற்றும் NFTE -ல் பொருளாளராகவும் பலகாலம்இயக்கத்திற்கு பணியாற்றிய தோழர். வாழ் நாளின் இறுதிவரைஎந்த வித மனகிலேசத்திற்கும் இடமளிக்காது, இயக்கத்தின் நலனே  தம் லட்சியம் என வாழ்ந்து காட்டிய தோழரின் வழியை பின்பற்றுவோம்.
தோழரின் குடும்பத்தினருக்கும் நமது இரங்கலை உரித்தாக்குவோம்.