Monday, 4 November 2013

                பொறுப்பின்மையின் உச்சகட்டம் !

              30-10-13 அன்று சென்னையில் NFTE-BSNL நடத்திய  உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றும்போது, " இவ்வாண்டும் போனஸ் கிடைக்காததற்கு BSNLEU சங்கம்தான் காரணம், ஏனென்றால், அச்சங்கம்தான்,  லாபமில்லை என்றால்  போனஸ் கிடையாது    என்ற நிர்வாகத்தின் தவறான நிலபாட்டை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொண்டது"  என்று கூறினேன்.

       இதனைக் கேட்டு  மன உறுத்தலாலும்,   வெதும்பலாலும்  BSNLEU 
பொதுச் செயலர் தோழர் அபிமன்யு, BSNLEU CHQ செப் சைட்டில் 

              " போனஸ் பிரச்னை: NFTE-BSNL தப்பிக்கும் வழி "  

என்று தலைப்பிட்டு  ஒரு  அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதை படித்தவுடன், போனஸ் பிரச்னையில் தோழர் அபிமன்யூவின் உச்ச கட்ட பொறுப்பின்மையையும் உணர்ச்சியில்லா தன்மையைக் கண்டு   அதிர்ச்சி அடைந்தேன்.

  BSNL நிர்வாகம் படுசாமார்த்தியமாக கம்பெனியின் லாபத்துடன்  போனஸை இணைத்ததையும்  அதை அன்றைய ஒரே அங்கீகாரச் சங்கமாக இருந்த BSNLEU தட்டிக் கேட்காமல் எந்த எதிர்ப்புமின்றி தண்டனிட்டு ஒப்புக்கொண்டதும் யாவரும் அறிந்ததே ! அதன்
 காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஊழியர்கள் போனஸ் 
பெறாமல் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

' லாபமில்லை என்றால் போனஸ் இல்லை"  என்ற தவறான திட்டம், உழைக்கும் வர்க்கம் போற்றி மனம் லயித்துப்    " போனஸ் என்பது கொடுபடா  ஊதியமே ! "  என்ற கொள்கை நிலைபாட்டிற்கு 
நேர்மாறானது ஆகும்

 சென்ற ஆறாவது அங்கீகாரத் தேர்தலின் போது NFTE-BSNL 
அங்கீகாரம் பெற்றவுடன்,  78.2 % IDA Mergerஐ பெறுவோம், 
போனஸ் உரிமையை மீட்போம் என்று நாம் வாக்குறுதி அளித்தது உண்மையே.

 ஆனால், துரதிர்ஷ்டவசமாக  நாம் இரண்டாம் சங்க அங்கீகாரத்தைத் தான் பெ முடிந்தது. அதன் காரணமாக, எல்லா மட்டங்களிலும் ஊழியர் தரப்பு செயலராக BSNLEUவைச் சார்த்தவர்தான் இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், நாம் அங்கீகாரம் பெற்ற 90 நாட்களுக்குள் முழுமனதோடு ஒற்றுமையான போராட்டத்தை உருவாக்கி 78.2 சத IDA Mergerஐப் பெற முடிந்தது.

அதேபோல போனஸ் பிரச்னையிலும் ஒன்றுபட்ட போராட்டம் மூலம் குறைந்த பட்ச போனசையாவது பெற வேண்டும் என்று நம்மால் 
இயன்ற அளவு பெருமுயற்சி மேற்கொண்டோம்.

ஆனால் அபிமன்யூவும் அவரது சகாக்களும் வேறு மாதிரியான சிந்தனை ஓட்டத்தில் இருந்தார்கள். 

NFTE-BSNL அங்கிகாரம் பெற்றவுடன்தான்  78.2 சத IDA இணைப்பு கிடைத்தது என்ற ஒரு நல்ல அபிப்ராயம்  ஊழியரிடையே வந்துவிட்டது. போனசையும் NFTE-BSNL சங்கத்தோடு சேர்ந்து போராடி பெற்று விட்டால் அந்த நல்ல அபிப்ராயம் மேலும் வலுப்பெற்றுவிடும் என்று அஞ்சி நடுங்கினார்கள்   அபிமன்யு போன்றோர்.  

 ஆகவே, நிர்வாகத்தோடு சேர்ந்து சதியில் ஈடுபடத் துவங்கி , போனஸ் பற்றிய  எந்தவிதமான உருப்படியான உடன்பாடும் இன்றி 24-10-13 அன்று தங்களது ஒரு நாள் போராட்டத்தை வாபஸ் வாங்கி விட்டனர்.  

  நமது அச்சம் சரியானதுதான் என்று ஒரு சில தினங்களிலேயே நிரூபணமானது.  

29-10-13 அன்று சென்னையில் BSNLEU நடத்திய ஒரு ஹால் கூட்டத்தில் பேசிய தோழர் அபிமன்யூ, கீழ்க்கண்டவாறு பேசியதாக மிகவும் நம்பத்  தகுந்த செய்தி நமக்கு கிடைத்து உள்ளது :
 '"நமது கம்பெனி கோடிக்கணக்கான ரூபாய் நட்டத்தில் இயங்குகிற காரணத்தால், இனிமேல் நமது ஊழியர்களுக்கு போனஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை ; வருங்காலத்தில் மாதாமாதம் சம்பளம் கொடுப்பதற்கே கம்பெனி  கஷ்டப்படுகிறது "

மேற்கண்டவாறு பேசிவிட்டு அடுத்த நாளே மனசாட்சி இல்லாமல்  


"அங்கீகாரம் பெற்றவுடன் போனஸ் பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை NFTE-BSNL நிறவேற்றவில்லை" 

என்று நமமை குறை கூறி எழுத அபிமன்யூவிற்கு  என்ன நியாயம் இருக்கிறது ?  

நாம் அபிமன்யூவிற்கு கீழ்க்கண்ட கேள் விகளை தொடுக்க விரும்புகிறாம், அவர் பதிலளிக்க  மறுத்தாலும் கூட.....

1. கம்பெனியின் நிதி நிலை மிகவும் மோசமானது என்று நன்றாக தெரிந்த பின்னும் போனஸ் கோரிக்கையை வேலநிறுத்த அறிவிப்பில் ஒரு கோரிக்கையாக சேர்த்தது ஏன் ?

2. அவர் பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக/பகிரங்கமாக இனி போனஸ் கிடைக்காது என்று    பேசத் தயாரா ?

BSNLEU சங்கத்தின் ஒவ்வொரு செயலையும் ஊழியர்கள்  கூர்ந்து கவனித்து வருகிறார்கள், போனஸ் பிரச்னையில் அதன் இரட்டை 
வேடம் உட்பட.

வேலை நிறுத்த பேச்சுவார்த்தையின் போது BSNLEU போனஸ் பிரச்னையில்  பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை என்பதையும் உணர்ந்தே உள்ளனர்.
  
 கிரிகெட்டில் மேட்ச் பிக்சிங் ( வெற்றி தோல்வியை முதலே நிர்ணயித்து விடுவது) பற்றி கேள்வி பட்டுள்ளோம் !

ஆனால் இப்போது  BSNLEU வின் Strike fixing ஐ உணர்ந்துள்ளோம் !!

                                                             சி.கே.மதிவாணன்,
                                                       துணைப் பொதுச் செயலர்
                                                               NFTE-BSNL     

No comments:

Post a Comment