Friday 28 June 2013

அமைப்பு விதிக்கு மாறானதை ஏற்க முடியாது !
                     
மதுரையில் நடந்த மாநில மாநாட்டில் 21 பதவிகளை நிரப்ப அவையின் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மாநிலச் செயலர் தன்னிச்சையாக தனது வெற்றிக்காக அமைப்பில் பிளவை உருவாக்கிய வர்களுக்கு சன்மானம் வழங்கும் வகையில் 5 சிறப்பு அழைப்பாளர்களை அறிவித்தார்.

அவர்கள் உண்மையிலேயே இளைஞர்களுக்கும் மகளிர் தோழியர்க்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் தனது இளமை காலந்தொட்டு பல ஆண்டுகளாக மாநில நிர்வாகியாக உள்ள தோழர்களுக்கு பதிலாக இளைஞர்களையும் மகளிர் தோழியரையும் மாநில சங்க நிர்வாகிகளாக நேரடியாக தேர்ந்தெடுத்து இருக்கலாம்.ஆனால் தங்களுக்கு ஆதரவாக இல்லாத மாவட்டங்களில் போட்டியாக செயல்பட அவர்களையும் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கணக்கு போடுவதால்தான் இப்பிரச்னையே வருகிறது. இளைஞர்களுக்கு  வாய்ப்பு தரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அருமைத்தோழர் ஜெகன் காலத்திலிருந்து நாம் எடுத்து செயலாற்றிவரும்  கொள்கை முடிவு : 
 " தோழர்கள் பணி ஓய்வு பெற்ற பின் நடக்கும் மாநாட்டில் அவர்களை தேர்ந்தெடுப்பதில்லை"

அந்த கொள்கை முடிவை அமலாக்க வேண்டும் என்பதே நமது வலியுறுத்தல். 

அதை இப்போது மீற வேண்டும் என்ற அவசியம் என்ன என்பதே நமது நியாயமான கேள்வி !

சிறப்பு அழைப்பாளரை  நியமனம் செய்ய மாநில செயலருக்கு அதிகாரம் சங்க சட்ட விதிகளில் உள்ளது என்று மாநிலச்செயலர் கூறியவுடன், அதை அவையில் படித்துக் காட்டுமாறு மாநிலப் பொருளர் தோழர் அசோகராஜன்  வேண்டுகோள் வைத்தார். இறுதி வரை மாநிலச் செயலர் அதைப் படித்துக் காட்டவில்லை. ஏனென்றால் அப்படி எந்த அதிகாரமும் மாநிலச் செயலருக்கு வழங்கப்படவில்லை என்பதே உண்மை.                                               

No comments:

Post a Comment