Thursday 4 April 2013

BSNL தொழிற்சங்க அங்கீகார தேர்தல் :
             
         கோவையில் எழுச்சிமிகு பிரச்சாரக் கூட்டம் !

மாவட்டத் தலைவர் தோழர் ஸ்ரீதரன் தலைமையில் 03-04-13 அன்று 350க்கும் மேற்பட்ட தோழர்களும்  தோழியர்களும் திரளாக பங்கேற்க மெயின் தொலைபேசி நிலையத்தில் காலை 10 மணிமுதல் முற்பகல் 2 மணிவரை எழுச்சியுடன் நடைபெற்றது.

  மாவட்டச் செயலர் தோழர்.N. ராமகிருஷ்ணன், பங்கேற்ற அனைவரையும் மனமுவந்து வரவேற்றார். 

நமது தேர்தல் அலுவலகம் மைய தொலைபேசி நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு,
நமது மாநில துணைத்தலைவர் தோழியர் திருமதி பரிமளம் அவர்கள்
பலத்த பட்டாசு வெடி முழங்க, தோழர் சுப்பராயன் அவர்களின்
அனல் பறக்கும் கோஷத்துடன் திறந்து வைத்தார்.
  தோழர் குப்தா அவர்களின் திரு உருவப்படத்திற்கு தோழர்கள்
C.K.மதிவாணன், ஜி. ஜெயராமன், பரிமளம் ஆகியோர்  மலரஞ்சலி
செய்தனர்.


சம்மேளனச் செயலர் தோழர் G.ஜெயராமன் துவக்கவுரையாற்றும்போது, கடந்த எட்டு ஆண்டுகளில் அங்கீகார BSNLEU சங்கம் ஊழியர்க்கு எந்த பயனையும் பெற்றுத் தராதது மட்டுமல்ல ! NFTE சங்கம் பெற்றுத் தந்த போனஸ், மருத்துவப் படி, LTC, LTC லீவ் என்கேஷ்மெண்ட் ஆகியவற்றை யும் சரண்டர் செய்ததை தனக்கே உரிய இலக்கிய பாணியில்  
விளக்கினார்.

    சங்கத்தின் அகில இந்திய துணைப்  பொதுச் செயலர் தோழர் சி.கே. மதிவாணன் நீண்டதொரு விளக்கவுரை ஆற்றினார்.

6வது அங்கீகாரத் தேர்தல், முதன்முறையாக புதிய BSNL அங்கீகார விதிகளின் அடிப்படையில் நடைபெறுகிறது. அதற்கு சென்னை தொலைபேசி மாநில சங்கம் 2004 முதல் எடுத்த முயற்சிகள், இந்திய கம்யூ. கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தோழர் குருதாஸ் குப்தா அவர்களின் வலியுறுத்தல் ஆகியவற்றை முழுமையாக விளக்கினார்.  1979லிருந்து நாம் பெற்று வந்த போனஸை நம்பூதிரி சரண்டர் செய்ததை விளக்கினார். நஷ்டத்தில் வந்தால் போனஸ் கிடையாது என்று BSNLEU போட்ட உடன்பாட்டை கடுமையாக சாடினார். நஷ்டத்தில் இயங்கும் அஞ்சல் துறையில் போனஸ் பட்டுவாடா ஆகும்போது, அதே துறையைச் சார்ந்த BSNL ஊழியர்க்கு மட்டும் போனசை மறுப்பது அநியாயம் என்று அறுதியிட்டு கூறினார். நிர்வாகம் வெளியிட்ட லாப நஷ்டக் கணக்கு மோசடியானது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கிய அவர், நிர்வாகத்தை த்ட்டிக் கேட்க BSNLEU தவறியதை அம்பலமாக்கினார்.

1-10-2007 முதல் 78.2 IDA அடிப்படையில் ஊதிய நிர்ணயப் பலனை பெறத் தவறியதால் ஊழியர்க்கு கடந்த 5 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள இழப்பை கணக்கிட்டு காட்டினார்.   

Top 10ல் இருந்த BSNL நிறுவனத்தை தயாநிதி மாறன், ராசா போன்ற அமைச்சர்கள், தனியார் கம்பெனிகளுக்கு  சலுகைகளைக் காட்டிவிட்டு அரசு நிறுவனமான BSNLஐ நலிவு நிறுவனமாக மாற்ற வைத்தபோது, அந்த ஊழல் அமைச்சர்களுக்கு நற்சான்றிதழ் கொடுத்த BSNLEUவின் துரோகத்தை அமபலமாக்கினார்.

தான் நாடெங்கும் கடந்த ஒரு மாதமாக  சுற்றுபயணம் மேற்கொண்ட போது, நாடெங்கும் சரண்டர் சங்கமான BSNLEUவிற்கு எதிராக அலை வீசுவதை விளக்கினார்.  NFTE வென்று மீண்டும் போனஸை பெறும் என்று அறுதியிட்டு கூறினார்.

மாநில சங்க துணைத் தலைவர் தோழியர் T. பரிமளம், சிறப்பாக உரையாற்றினார்.  மகளிர் பிரச்னைகளில் நமது சங்கம் எடுத்த முன் முயற்சிகளை விளக்கிய அவர், மதுரை  சொல் வழக்குப்படி, BSNLEUவிற்கு சங்கு ஊதப்பட்டுவிட்டது என்று பலத்த கரவொலிக்கிடையே கூறினார்.

நமது அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் எஸ்.எஸ்.கோபால கிருஷ்ணன் அவர்களின் நிறைவுரையோடு கூட்டம் முடிவுற்றது. 






நன்றி: NFTE கோவை

No comments:

Post a Comment