Thursday, 30 June 2016



IDA ICREASE            = 2.4%

PRESENT IDA       = 112.4%

FROM JULY 2016 =114.8%

Wednesday, 22 June 2016

  J.E., (TTA) - OUTSIDERS  ஆளெடுப்பு 
நாடு முழுவதும் 2700 JE  - (முன்னாள் TTA) 
இளநிலைப் பொறியாளர்களுக்கான 
ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • விண்ணப்பிக்கும் நாள் : 10/07/2016
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10/08/2016
  • தேர்வு நாள்  : 25/09/2016
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு இணையதளம் மூலம் நடைபெறும்.

தமிழகத்தில் 198 காலியிடங்கள் - 
உடல் ஊனமுற்றோருக்கு 6 காலியிடங்கள் 
OC -105      OBC - 53     SC - 38     ST - 2
வெற்(று)றிக்கூச்சல்


CMDக்கு நன்றி...
CMDயின் வார்த்தைகளுக்கு நன்றி...
CMDயின் கூற்றுக்கு நன்றி...

BSNLEU சங்க தகவல் பலகையிலும்...
இணைய தளங்களிலும் தென்பட்ட..
மேற்படி வாசகங்களைக் கண்டு...
அப்பப்பா...
நமக்கு மேனி சிலிர்த்து விட்டது...

அப்படி என்னதான் நமது CMD சொல்லி விட்டார்?...
மைசூருவில் நடந்த
AIBSNLEA அதிகாரிகள் சங்கத்தின்
அகில இந்திய மாநாட்டில் நமது CMD..
 "We will make 3rd PRC a success." 
என்று தனது வாழ்த்துரையில் கூறியுள்ளார்.
அதாவது... அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றத்தை
நாம் வெற்றிகரமானதாக மாற்றுவோம்" என்று கூறியுள்ளார்.

இதே CMD .. இதே கர்நாடகாவில்...
சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில்...
" BSNL நட்டத்தில் இயங்குகிறது...
எனவே BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்திற்கு வழியில்லை"
என்று பத்திரிக்கையாளர்களிடம் அறிக்கை விடுத்தார்...

இன்று... இதே CMD.. 
இதே கர்நாடகாவில்...மைசூருவில்...
அதிகாரிகளின் சம்பள மாற்றத்தை 
வெற்றியாக்குவோம் என கூறியுள்ளார்.

ஊழியர்களுக்கு ஒன்றுமில்லை என்று பெங்களூருவில் கூறியவர்...
அதிகாரிகளுக்கு அள்ளித்தருகிறோம் என்று மைசூருவில் கூறியுள்ளார்...

CMDயின் இந்தப் பாரபட்ச பேச்சு.. 
ஊழியர்களுக்கும்... ஊழியர்  சங்கங்களுக்கும்.. 
கோபத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்...
மாறாக... அவருடைய பேச்சு 
தங்களது சாதனை என்று மார்தட்டும் 
காட்சியைத்தான் நாம் இன்று காண்கின்றோம்...

அதிகாரிகளுக்கான ஊதிய மாற்றத்தை 
வெற்றியாக்குவோம் என்று சொன்ன CMD...
" ஊழியர்களின் சம்பள மாற்றத்திற்கான 
இருதரப்பு ஊதியக்குழுவை அமைப்போம்...
ஊழியர்களின் ஊதிய மாற்றத்தை வெற்றியாக்குவோம்"
என்று மனம்  மலர்ந்தருளியிருந்தால்...
எல்லா தரப்பு ஊழியர்களும்  நன்றியை வெளிப்படுத்தியிருப்பார்கள்...

இந்திய தேசத்தில்...
உழைப்பாளிகளுக்கான சம்பள உயர்வு என்பது..
எல்லாக்காலங்களிலும்  எட்டாக்கனியாகவும்...
கையில் கிடைத்த பின்பு எட்டிக்காயாகவும் மட்டுமே இருந்துள்ளது.
தோழர் இந்திரஜித்குப்தா காலம் மட்டுமே விதிவிலக்கு...

ஊதிய மாற்றத்தில் நாம் பயணிக்க வேண்டியது வெகுதூரம்...
அது வரை வெற்றுக்கூச்சல்களில்..
நமது சக்தியை விரயமாக்காமல் இருப்போம்...

Thanks: KARAIKUDI NFTE

Wednesday, 1 June 2016


தமிழ்மாநிலச் செயலர் தோழர் பட்டாபி(31-05-2016)- ல் பணி ஓய்வு பெறுகின்றார்.நல்ல படிப்பாளி.நல்ல படைப்பாளி.நல்ல சிந்தனையாளர். .அவரது பணி ஓய்வு காலம் அமைதியும் ஆரோக்கியமாயும் அமைய வாழ்த்துக்கள்.