போனஸ் பற்றிய கருத்து.
பூஜைக்கு வராத போனஸ் கடந்த 5 ஆண்டுகளைப் போல்வே இந்த ஆண்டும் கானல் நீராய்ப் போனது போனஸ். இந்த ஆண்டு ஊழியர்கள் போனஸ் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பு பொய்யாய்ப் போனது. போனஸ் பற்றிய வரலாறுகள் பற்றியே இனி பேசி,கட்டுரைகள் எழுதப் போகிறோமா? போனஸ் என்ற வர்த்தையையே பறிகொடுத்து இன்செண்டிவ் ஆன கதையை ஆய்வுகள் அலசி, எழுதி,பேசப் போகிறோமா? PLB (PRODUCTIVITY LINKED BONUS) ஒப்பந்தம் போடப்பட்ட போது தோழர் குப்தா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். PLI (PROFIT LINKED INCENTIVE- இலாபத்தின் அடிப்படையில் இன்செண்டிவ்) ஒப்பந்தம் உருவான போது தோழர் நம்பூதிரியைப் போற்றும் குரல் மேலோங்கி, அதை விமர்சிக்கும் குரல்கள் குன்றிப் போயின. PLI கமிட்டி கூட்டத்தைக் கூட உரிய காலத்தில் கூட்ட வைக்க நிர்ப்பந்தங்கள் உருவாக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் கமிட்டி கூடியது. மீண்டும் கூடும் என்றார்கள். கலைந்த கூட்டம் மீண்டும் கூடவில்லை. 19.10.2015 அன்று தர்ணா அறிவிக்கப்பட்டது. மாதம் ஒரு தர்ணா என்ற அழைப்பால் மாவட்டச் சங்கங்கள் படும் கஷ்டத்தை யார் உணர்வார்? போனஸ் அடிப்படை உரிமை, கொடுபடா ஊதியம் என்றெல்லாம் உரக்கக் கூவி விட்டு ஆர்ப்பாட்டம், தர்ணா மட்டுமே அரங்கேற்றி பின்னர் அமைதி காக்கப் போகிறோமா? 16.10.2015 அன்று நேசனல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஊழிய்ரகள் போன்ஸ் பற்றி நல்ல முடிவு வரும் என எதிர்பார்த்தனர். ஆனால் மிஞ்சியது மீண்டும் ஏமாற்றமே. எந்த ஒரு பிரசனைக்கும் தீர்க்கமான தீர்வின்றி முடிந்தது நேசனல் கவுன்சில். தலமட்டங்களில் போராட்டம். ஆனால் நேசனல் கவுன்சிலில் அது பிரதிபலிக்காதது வேதனையளிக்கிறது. கண்டனத்தை தெரிவித்து ஒரு வெளிநடப்பு செய்யக் கூட இயலாதது வருத்தமளிக்கிறது. போனஸ் கதை சாரி.. இன்செண்டிவ் கதை இப்படியென்றால் GPF கதை அதை விட சோகமாகியுள்ளது. ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் மாநாடுகள் நடத்தி என்ன சாதிக்கப் போகிறோம்? பதவிகளைத் தக்க வைக்கவா? இத்தகைய உணர்வு அனேகமாக எல்லோருக்கும் இருக்கும். ஆனல் அதை வெளிப்படுத்தமுடியாத சங்கடங்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் சேர்த்துத்தான் இந்த செய்தி.
நன்றி: ஈரோடு NFTE. வலைதளம்.
No comments:
Post a Comment