Tuesday, 14 July 2015

திட்டமிட்ட தீய சதி

BSNL நிர்வாகம் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சதியை அரங்கேற்றியுள்ளது. நமது நிறுவனத்திற்கு கணிசமான வருமானம் தருவது லேண்ட்லைன் ப்ராட்பேண்ட் சேவை.
இந்த சேவையை தருவது, பராமரிப்பது, பழுதுகளைச் சரிசெய்வது போன்றவற்றை அவுட்சோர்சிங் என்ற அடிப்படையில்   தனியாருக்கு வழங்க BSNL நிர்வாகம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும்   குறிப்பிட்ட நகரங்க்களைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, ஆந்திராவில் ஹைதராபாத், கர்நாடகாவில் பெங்களூரு, குஜராத்தில் அகமதாபாத்,மகராடிரத்தில் புனே-நாக்பூர், உத்தரப்பிரதேசத்தில் மீரட்-நொய்டா-காசியாபாத், ஹரியானாவில் குர்கான்-பரிதாபாத், உத்தராஞ்சலில் டேராடூன் ஆகிய நகரங்கள் அவுட்சோர்சிங் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நமது தூறையில் TM,RM, SR TOA கேடர்களில் ஏற்கெனவே ஊழியர்கள் அதிகமாக உள்ளனர் என நிர்வாகம் கதறுகிறது. இவர்களின் நிலை என்னவாகும்? TTA கேடரில் உள்ளாவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதா?
ப்ராட்பேண்ட் சேவையை நல்ல முறையில் பராமரிக்கவும் அதை விரிவுபடித்துவதும் அவசியம்.
நம்மிடம் உள்ள மனித வளத்தையும், மனித ஆற்றலையும் வைத்து இதைச்  செய்ய திட்டமிட்டிருக்கல்லாம். அதற்கு வழிவகைகளைக் கண்டு பிடித்திருக்கலாம். இந்த வழியில் சிந்தித்து தொழிற்சங்கங்க்களுடன் பேசி ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கலாம்.
ஆனால் எதிர்மறைச் சிந்தனையோடு அவுட்சோர்சிங் என முடிவெடுத்தது ஒரு சதியே.
இது யாருடைய ஆணையின் பேரில் யாருக்காக, யார் பயன் பெற உருவாக்கப்பட்ட சதி?
இதன் மூலம் தனியார் நமது நெட் ஒர்க்கில்   நுழைய வாய்ப்பு ஏற்படாதா?
இது குறித்து நிர்வாகத்துடன் விவாதிக்க வேண்டும். சேவையை சிறப்பாகத் தர திட்டமிடல் வேண்டும்.
நிர்வாகம் இதை செய்யத் தவறினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்.
நிச்சயம் நமது தலைவர்கள் தகுந்த நடவ்டிக்கை எடுப்பார்கள்.

இது குறித்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மனம் திறந்த ஆய்வு தேவை.

நன்றி:ஈரோடு NFTE.

No comments:

Post a Comment