நஷ்டத்தில் செயல்படும் ஏர் இந்தியா, 
எம்.டி.என்.எல்., ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் உள்ளிட்ட 65 பொதுத் துறை 
நிறுவனங்களில், 5 நிறுவனங்கள் மூடப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் அனந்த் கீதே செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
5 பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்படவுள்ளன. 
அதில், கைக்கடிகாரம், டிராக்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹெச்.எம்.டி. 
நிறுவனத்தின் 3 பிரிவுகள் அடங்கும். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, 
தானாக ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ் உரிய நிதி பெற்றுக் கொண்டு ஒய்வு 
பெறலாம் என கூறப்பட்டுள்ளது என்றார்.
எனினும், மூடப்படவுள்ள பிற பொதுத் துறை நிறுவனங்களின் பெயர்களை மத்திய அமைச்சர் அனந்த் கீதே வெளியிடவில்லை.
விமானம், செல்லிடப்பேசி துறைகளில் 
புகழ்பெற்று விளங்கிய ஏர் இந்தியா, எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள், 
கடந்த 4 ஆண்டுகளாக லாபத்தை ஈட்டவில்லை.
இதுதொடர்பாக மக்களவையில் தாக்கல் செய்ய 
அறிக்கைகளில், ஏர் இந்தியா நிறுவனம், 2011-12ஆம் நிதியாண்டில் ரூ. 7559 
கோடியும், 2012-13ஆம் நிதியாண்டில் ரூ.5,490 கோடியும், 2013-14ஆம் 
நிதியாண்டில் ரூ.5,388 கோடியும் நஷ்டத்தை சந்தித்ததாக 
தெரிவிக்கப்பட்டிருந்தது.
     எம்.டி.என்.எல்.
 நிறுவனம், 2013-14ஆம் நிதியாண்டில் ரூ.7,820 கோடி லாபத்தில் செயல்பட்டது. 
ஆனால், அதற்கு முந்தைய 2 நிதியாண்டுகளில் ரூ. 5,321 கோடியும், ரூ. 4,109 
கோடியும் நஷ்டத்தை சந்தித்தது. ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனம், கடந்த 3 
நிதியாண்டுகளில், முறையே ரூ.859 கோடி, ரூ.551 கோடி, ரூ. 462 கோடி நஷ்டத்தை 
சந்தித்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.(sick units) நொடிந்து போன Air India, MTNL உள்ளிட்ட பொதுத்துறை
நிறுவனங்களை மூடி விடுவது, அதில் பணியாற்றும் ஊழியர்க்கு
கட்டாய ஓய்வு வழங்குவது போன்ற மோடி அரசின் முடிவுகளை
\வன்மையாக கண்டிக்கிறோம்
 
No comments:
Post a Comment