Monday, 28 October 2013


தீபாவ(லி)ளி

இந்திய தேசத்தின் மிகப்பெரும் விழாவான தீபாவளித்திருநாள் 
நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் உழைக்கின்ற  
ஊழியர்களின் உள்ளமோ நொறுங்கிக்கொண்டிருக்கின்றது.  

3 ஆண்டுகளாக போனஸ் இல்லை. 
அந்த வரிசையில் இந்த ஆண்டும் சேர்ந்திடுமோ? 
என்ற கேள்வி எழுகின்றது. 

அமெரிக்க அரசு இந்திய மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு 
மதிப்பளிக்கும் வகையில் தீபாவளியைக் கொண்டாட தயாராகி 
வருகின்றது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறையின் 
CMDயோ  ஊழியர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் 
உரிமையான போனசை அறிவிப்பதை விடுத்து,  நிதி நிலையைக்
காரணம் காட்டி போனசை மறுத்து வருகின்றார். 

மருத்துவப்படியை நிறுத்தியதால் 400 கோடி, 
LTCஐ நிறுத்தியதால் 100 கோடி, 
78.2 நிலுவையை பறித்ததால் 1000 கோடி 
என்று ஊழியர் உரிமையைப்பறித்த  CMD வெறும் 70 கோடி 
செலவாகும் போனசை மறுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?..

இதே ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 18 கோடியை உத்தரகண்ட் 
வெள்ள நிவாரணத்திற்கு அள்ளி வழங்கியதை மறக்க முடியுமா? 
மொத்தத்தில் BSNL நிர்வாகம் ஊழியர்களின் உணர்வுகளை மதிக்க 
தவறி விட்டது. போனஸ்  என்பது லாபம் நட்டம் சார்ந்ததல்ல. 

அது இந்த தேசத்தின் பண்பாடு சார்ந்தது. எனவே போனஸ் மறுப்பு 
என்பது பண்பாடற்ற செயலாகவே கருதப்படுகின்றது. 

ஊழியருக்கு போனஸ் என்ற உரிமையை பெற்றுத்தந்த NFTE 
பேரியக்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் போனசை பெறுவதற்கு 
தனது முயற்சியை தொடர்ந்து செய்து வந்தது. 

இந்த ஆண்டு மீண்டும் அங்கீகாரம்  கிடைத்திருப்பதால் கூடுதல் 
பொறுப்புடன் போனசைப் பெற கடமையுணர்வுடன் செயலாற்றி 
வருகின்றது. 

தோழர்களே !..போனஸ் நமது உரிமை என்ற குரலை ஓங்கி 
ஒலிப்போம். BSNL ஊழியர்கள் போனஸ் தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்னும் நிலை மாற்றுவோம். அக்டோபர் 30 உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக்குவோம்.

   From Tamil Nadu circle union Web site   

மோடிக்கு வழி நடத்தும் திறன் இல்லை: நியூயார்க் டைம்ஸ்!



மோடிக்கு வழி நடத்தும் திறன் இல்லை: நியூயார்க் டைம்ஸ்!

'பெரும்பாலான இந்தியரிடம் பயம் மற்றும் விரோதத்தை விதைப்பதால் மோடியால் நாட்டை சிறப்பாக வழி நடத்த முடியாது என்று பிரபல அமெரிக்க ஏடான நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

மோடி பற்றி சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ள நியுயார்க் டைம்ஸ், பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியால் இந்தியாவை வழி நடத்த இயலுமா? என்று அலசியது.

ஆசிரியர் குழுவின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் "மோடி பிற எதிர்கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றவோ, பிறரின் அபிப்ராயங்களை சகித்துக் கொள்ளவோ எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் ஏழ்மை சதவீதம் குறைவு என்றாலும் நாட்டின் ஏழ்மை மிகுந்த முஸ்லிம்கள் அங்கே தான் உள்ளனர் என்றும், குஜராத்தின் பொருளாதார நிலை சிறபாக இல்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

138 மில்லியன் முஸ்லிம்கள், சிறுபான்மையினர், மற்றும் தாழ்த்தப்பட்டவர் மோடி பிரதமர் ஆவதை விரும்பவில்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'

- டைம் பத்திரிக்கை மோடியைப் புகழ்ந்து எழுதியதற்காக பட்டாசு வெடித்துக் கொண்டாடியவர்கள், நியூயார்க் டைம்ஸின் இந்தக் கட்டுரைக்கு என்ன பதில் சொல்வார்கள்?

தகவல்: NFTE கோவை




இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இடதுசாரி கட்சிகள்
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்திமைதானத்தில் மாபெரும் பேரணி - பொதுக்கூட்டம் நடத்தினார்கள்.

செங்கடலாய் கூடியுள்ள கூட்டத்தைப்
பாருங்கள். இந்த செய்தியை எந்தத் தொலைக்காட்சியிலாவது
அல்லது எந்தப் பத்திரிக்கையிலாவது பார்த்திருப்பீர்களா...?

மோடியின் கூட்டத்தையும், ராகுலின் கூட்டத்தையும் மட்டுமே
திட்டமிட்டு காட்டுகிற ஊடகங்களின் கண்களுக்கு அல்லது
காமிராக்களுக்கு இடதுசாரிக் கட்சிகளின் கூட்டம் மட்டும்
தெரிவதில்லையா...? இது நியாயம் தானா...?

இது தான் ஊடக தர்மமா...? அல்லது இவர்கள் ஆட்சிக்கு
வந்துவிடப்போகிறார்கள் என்ற பயமா..?


என்ன தோழர் இதுக்கெல்லாம் ஆதங்கப் படுறீங்க  .இந்த படத்தைக் காட்டி
இது மோடிக்கு வந்த கூட்டம்னு சொல்லாம விட்டாங்களே அதுக்காக சந்தோசப் படுங்க!

தகவல்: NFTE கஞ்சிபுரம்
BSNL VIGILANCE AWARENESS WEEK
(28-10-2013 TO 02-11-2013)
திருவண்ணாமலை தொலைபேசி நிலையத்தில்
BSNL VIGILANCE AWARENESS WEEK

இன்று (28-10-2013) 11.00 மணியளவில் நடைபெற்றது. திரு. T.பொன்னிவளவன் SDE அவர்கள் வாசிக்க மற்ற ஊழியர்கள் பின்தொடர்ந்து  உறுதிமொழி வாசித்தனர்



Friday, 25 October 2013


We appreciate the Immediate Response   

                                  

23-10-2013 : Corporate office issued clarification on wightage point system to compassionate ground appointments. Letter No.-273-18/2005-Pers.IV. Dated:-22-10-2013. Click Here

சுடச் சுட 

18-10-13 அன்று டெல்லி சென்றிருந்த நமது துணைப் பொதுச்செயலர் தோழர் சி.கே.மதிவாணன் அவர்கள், அகில இந்திய தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்களுடன் சென்று BSNLன் பல முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஊழியர்களின் பல முக்கிய பிரச்னைகளை விவாதித்தார்.

திரு நிரஜ் வர்மா Sr. GM (SR) அவர்களிடம் சென்னை தொலைபேசி மாநிலத்தில் கருணை பணி பற்றி பரிசீலிப்பதில் பல குழப்பங்கள் உள்ளதை விவாதித்துள்ளார்.

இறந்த ஊழியரின் அப்போதைய குடும்ப சூழ்நிலையை கணக்கில் கொள்ளாமல், புதிய பென்சன் அடிப்படையில் Weightage pointஐ கணக்கீடு செய்வது தவறு என்றும் அழுத்தந்திருத்தமாக வாதிட்டுள்ளார். 

தோழர் மதிவாணன் அவர்களின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொண்ட அந்த மூத்த அதிகாரி, உடனடியாக ஒரு மாற்று உத்திரவை வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.அந்த உத்திரவு மூலம் இந்தியா முழுமையிலும் உள்ள பல நூறு பாதிக்கப் பட்ட குடும்பங்களின் வாரிசுகள் கருணைப் பணி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை பயன்படுத்தி ஊழியர் பிரச்னைகளை NFTE-BSNL தீர்க்கும் இவ்வேளையில், தான்தான் முதன்மை அங்கீகாரச் சங்கம், எங்களுக்கு கமிட்டிகளில் விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வேண்டும், எப்படியாவது எங்கள் கூட்டணி சங்கத்தாருக்கு, சட்டத்தை மீறியாவது கவுன்சில்களில் பதவி தரவேண்டும் என்று செயல்பட்டு கொண்டிருக்கிறது BSNLEU.

நன்றி: NFTE காஞ்சிபுரம்

78.2 நிலுவை வழங்க கோரி DOT SECRETARY க்கு CMD-BSNL  கடிதம் படிக்க

imggallery