Friday, 13 February 2015

குண்டர்கள் அல்ல ! அணுக்கத்தொண்டர்கள் !!
குப்பைகள் அல்ல ! சங்கம் காக்கும்  கோமேதகங்கள் !!! 


சென்னை தொலைபேசி மாவட்ட சங்கத்திற்கும் தமிழ் மாநில சங்கத்திற்குமிடையே ஒருங்கினைப்பு  அதிகரிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஜபல்பூர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட  சென்னை தொலைபேசி மற்றும் தமிழ் மாநில சங்கங்களைச் சார்ந்த புதிய அகில இந்திய சங்க நிர்வாகிகளுக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழாவினை ஏற்பாடு  செய்து பெருந்தன்மையோடு அதற்கு தமிழ் மாநிலச் செயலர்  பட்டாபிராமனையும் அழைத்தார் தோழர் மதிவாணன். 

ஆனால் பட்டபிராமனின் ரகசிய திட்டமோ ஓற்றுமையே வரக் கூடாது என்பதுதான். அதனால்தான், சேலத்தில் அதைவிட பிரம்மாண்டமான விளக்க  கூட்டத்தில் பங்கேற்கப் போகிறேன் என்று சாக்கு போக்கு சொல்லி அந்த கூட்டத்திற்கு வராமல் ஒதுங்கி நின்றார். 

 தனது நம்பிக்கைகுரிய மூத்த தோழன் சொன்ன அறிவுரையை புறந்தள்ளினார். ஒற்றுமை வராமல் இருக்க,    சென்னை  தொலைபேசி  மாநில சங்கத்தை வம்புக்கு இழுத்து, பிரச்னைகளை உருவாக்கி, பிளவை நிரந்தரமாக்குவதற்காகத்தான்  மதுரையில் STR  கூட்டத்தை நடத்தி சென்னை தொலைபேசியைச் சார்ந்த அன்பழகனை மாவட்டச்  செயலராக்கினார்  பட்டாபிராமன்.

பல மாதங்கள் பொறுமை காத்த சென்னை தொலைபேசி மாநிலத் தோழர்கள், தமிழ் மாநில சங்க செயற்குழுவிற்கு நியாயம் கேட்டு வந்தார்கள்.  சங்கத்தை காக்கும் அந்த அணுக்கத் தொண்டர்களை குண்டர்கள் என்று வேலுர் வெப் சைட்டில் எழுதியுள்ளனர். 

குப்பைகள் என்று காரைக்குடியார் பகன்றுள்ளார்.

 அவர்கள் குண்டர்களாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்...........

    சிறிது யோசித்துப் பார்ப்போம் ! 

அரங்கத்திலிருந்தவர்கள் அடிவாங்காமல்  இருந்திருப்பார்களா ?

பல மண்டைகள் உடைந்திருக்காதா !!  

காயமின்றி அனைவரும் ஊர் திரும்பி இருக்க முடியுமா !? 

காவல் துறையினரை அழைத்தது யார் ? பட்டாபிராமன்  மற்றும் முரளி தானே !

காவல் துறையினரிடம் முரளி மூக்குடைபட்டது  மறந்து விட்டதா !? 

பிரச்னையை புரிந்து கொண்ட  சர்க்கிள் இன்ஸ்பெக்டர் " சென்னை தோழர்கள்  தவறாக எதுவும் செய்யவில்லை ! சென்னைக்காரரை (அன்பழகனை)  நீங்கள் வெளியேற்றினால் அவர்கள் அமைதியாக சென்றுவிடுவார்கள் !! " என்று கூறிவிட்டு போலீஸ்காரர்களை  திரும்ப  அழைத்துச் சென்று விட்டார்  !

காரைக் குடி யார் எழுதிய வரிகள்:  

" பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து குப்பைகளை வெளியில் தள்ளிய கோபம் சொல்வதா?.."..


குப்பைகளை வெளியேற்றினோம் என்று கூறி உண்மையை உடைத்து விட்டார் காரைக் குடி யார் !

அந்த 70 பேர் உண்மையிலேயே குண்டர்களாக  , இருந்திருந்தால்,

மதுரை தோழர்களாலேயே விரட்டி அடிக்கப்பட்ட இரண்டெழுத்துவில்லன்  ஜாடை காட்டிய பிறகு, காரைக்குடியார், ,நாகர்கோவில்  ஜோசப்,  கடலூர் இளங்கோ போன்ற சிலரால் " அவர்களை  குப்பைகளைப் போல தள்ளினோம்"  என்று காரைக் குடியார் எழுதியுள்ளாரே !! அது  நடந்திருக்குமா! சாத்தியப்பட்டிருக்குமா !!

கெட்டிக்காரன் புழுகு எட்டே நாள் என்பதுபோல, வேலூர்காரரின் 
புழுகை தோலுறித்து காரைக் குடி யாரே, தன்னை அறியாமல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்... 

அவர்கள் குண்டர்கள் அல்ல ! குப்பைகள் என்று !!

நம்மை பொறுத்தவரை அந்த 70 பேர் உண்மையிலேயே குப்பைகள் அல்ல 
                          சங்கம் காக்கும்  கோமேதகங்கள்  !!

நன்றி: NFTE-கோவை.
மீத்தேன் எரிவாயு திட்டம் கைவிடக்கோரி போராட்டம்
      காற்றில் பறக்கும்  தமிழக பாரம்பரியம் !
                                    ( நூரு போயி லட்சம்  )

தமிழகத்தில் E-3  மற்றும் Line staff and Group D சங்கங்கள் இணைந்து NFTE-BSNL உருவான போது நாம் ஒரு கொள்கை நிலைபாட்டை உருவாக்கினோம். 

மாநிலச் செயலர்  E-3 தோழர் என்றால் மாநிலத் தலைவர் போன் மெக்கானிக் தோழர் என்று.

2003ல், திருநெல்வேலி மாநில மாநாட்டின்போது, போன் மெக்கானிக் தோழர்தான் மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் 
என்று பிரச்சாரம் செய்தனர் பட்டாபி  அணியினர் .

2007ல், கோவை மாநில மாநாட்டில் பட்டாபிராமன்  மாநிலச் செயலர் என்றவுடன் அந்த நிலைபாட்டை அம்போ என்று விட்டுவிட்டு  தலைவர் லைன் ஸ்டாப் என்றனர்.

மதுரை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சேலம் மாவட்டச் சங்க  நில அபகரிப்பு புகழ் நூருக்கு பதிலாக  லட்சம் என்று சென்னையில் பூட்டிய அறையில்  முடிவெடுத்ததாக அறிவித்துள்ளனர்.

 இது ஜனநாயகரீதியாக நடந்த தேர்தல் அல்ல. கோஷ்டி முடிவு !!

  பட்டாபி அணியிலேயே கூட நல்ல தரம் வாய்ந்த போன் மெக்கானிக் தோழர் ராப்ர்ட்ஸ் உள்ளார். 

1982ல் சேலம் மாநில மாநாட்டில் தோழர் சி.கே.,மதிவாணன் அவர்களால் அடையாளம் காணப்பட்டு மாநில சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப் பட்டவர், மாவட்டச் செயலராக, மாவட்டத் தலைவராக, மாவட்ட பொருளராக  என்று  பல பொறுப்புகளை ஏற்ற அனுபவம் வாய்ந்த நிதானமான தோழர் அவர்.

ஒற்றுமைக்கு குரல் கொடுக்கும் அவரை ஓரம் கட்டி விட்டு,  டெலிபோன் ஆபரேட்டரான, விரைவில் ஓய்வு பெறப் போகும் லட்சத்தை நியமிப்பது ஏன் ? மாநிலச் செயலர் பட்டாபிராமனும் டெலிபோன் ஆபரேட்டர்,  லட்சமும் டெலிபோன் ஆபரேட்டர். இது கேடர் உணர்வை கிளப்பி விடாதா ?

  மாநில துணைத் தலைவராக இருக்கும்போதே, மூத்த தோழர் கோவை சுப்பராயன் அவர்களை சென்னை செயற்குழுக் கூட்டத்தில்," மதுரை வரும்போது கையையும்  காலையும் உடைப்பேன்"  என்று 
மதுரை முத்து பாணியில் மிரட்டிய லட்சம்,  தலைவரானால் எப்படி நர்த்தனம் ஆடுவார் !

 எந்த நிலப் பிரச்சனைக்காக நூரு விலகினாரோ, அதே தவறுக்கு  உடந்தையாக இருந்தவருக்கு துணைச் செயலர் பதவியா ! . 

தகவல்: NFTE-கோவை.

Wednesday, 11 February 2015

10-02-2015ல்  சென்னையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுவில் நடந்தது என்ன?
 மாநிலச் செயலர் Com.பட்டாபி   அவர்களின்     உண்மை சொரூபம் என்ன?

காண இங்கே கிளிக் செய்து பார்த்து படித்து தமிழகத் தோழர்களுக்கு
விநியோகம் செய்து சங்கத்தை காக்க வேண்டுகிறோம்.

தகவல்: NFTE-கோவை

Friday, 6 February 2015

06-02-2015 இன்று திருச்சி NFTE மாவட்ட தலைவர்

         தோழர் S.சுந்தரவேல் மறைந்தார்! 




திருச்சி NFTE தொழிற்சங்கத்தின் துடிப்பு மிக்க பிரச்சாரகர், சிறந்த 

பேச்சாளர், திறமையான அமைப்பாளர், அனைவருடனும் பழகிய  

தோழர் காலமானார் என்ற செய்தி கேட்டு  வருந்துகிறோம். 

குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும்  அவரது குடும்பத்தார்க்கும் 

மாவட்டத் தலைவரை  இழந்து தவிக்கும் திருச்சி தோழர்களுக்கும் 

நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்