Monday, 30 June 2014



IDA  2.9% உயர்வு
 

01-07-2014 முதல் IDA  2.9% உயர்வு

தற்போது பெறுவது  = 88.4%


உயர்வு             =   2.9%

01-07-2014 முதல்        = 91.3%

Friday, 27 June 2014



இன்று 27-06-2014 திருவண்ணாமலையில் தோழர் கணேசன் T.M (BSNLEU) அவர்களின் பணிநிறைவு பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் சில பதிவுகள்.






Thursday, 26 June 2014






 மண்டல்பரிந்துறையை அமுல் படுத்தியதிற்காக மகுடம் துறந்தவர்.
ஜூன் 25: இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம் இன்று.
மிகக் குறுகிய காலமே பதவியில் இருந்தாலும் பலராலும் மரியாதையுடன் நினைவுக் கூரும் விதத்தில் இவரின் பணிகள் அமைந்திருந்தன
அவர் பிறந்த இந்நாளின் பெருமையுடன் அவர் நினைவைப் போற்றுவோம்.
பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாவலர்கள் ....!

Tuesday, 24 June 2014

இந்தி திணிப்பு முயற்சி கூடாது: இந்திய கம்யூ. தேசிய கவுன்சில் தீர்மானம்

இந்தி திணிப்பு முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், சமூக வலைதளங்களிலும் சுற்றறிக்கைகளிலும் இந்தி மொழியை மட்டும் பயன்படுத்துமாறு அரசு துறைகளை நிர்பந்திக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும், அரசின் இதுபோன்ற நடவடிக்கை, மக்களை வாட்டி வதைக்கும் சமூகப் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் முயற்சி ஆகும் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
தேவையற்ற மொழி மோதல்களை உருவாக்கும் என்பதால், இந்தியை ஒரே ஆட்சி மொழியாகத் திணிக்க முடியாது என்றும், தேசிய அளவில் கருத்தொற்றுமை ஏற்படும் வரையில் இந்தியும் ஆங்கிலமும் ஆட்சி மொழிகளாகத் தொடரவேண்டும் என்றும் தீர்மானம் மூலம் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டண உயர்வைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டண உயர்வானது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்து, மக்கள் மீது பளுவை சுமத்தும் என்றும் இந்தக் கட்டண உயர்வினை அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, 17 June 2014


   மீண்டு வருவோம் ! மீண்டும் வருவோம் ! 

  மேலும் வலுவாக ! மேலும் 
ஒற்றுமையாக !!
                    
                                   - தோழர்களின் சூழுரை !!!


ONE DAY POLITICAL ORIENTATION CAMP FOR BSNL EMPLOYEES 

AT BHAVANI:


At Bhavani near Erode one day camp for BSNL employees of both Tamil Nadu 
and Chennai telephones was organized by Erode comrades on 14/06/2014. 

More than 150 employees participated in the camp. Com. C.K.Mathivanan, 

Dy. GS NFTE-BSNL presided the camp in which communist and central trade 
union leaders M. Appadurai,  M.Veerapandian, K.R. Thirunavukkarasu and 
senior union leader Mali spoke on various topics including relevant of Marxist 
philosophy and the role of trade unions in the removal of poverty and 
unemployment from the country. 

Comrades G. Jayaraman secretary(NFTE-BSNL), k.Ashokraj, Circle 

Treasurer, L.Subbarayan, ACS of NFTE-BSNL Tamil Nadu explained 
the challenges before the telecom Industry and the responsibilities of 
Unions/ Associations in the present difficult scenario. 

We thank Erode comrades Lazar(District secretary), Yasin G.Kumar, 
Bangaru for organizing the one day camp very purposefully and in a 
organized manner. 

Comrades C.K.Ragunathan, V.Babu, Gulzar Ahamed and Shanmugam 

were felicitated at the camp for their election as directors in the 
Tamil Nadu Telecom Co-Operative society.




 " மார்க்ஸீயத்தின் இன்றைய பொருத்தப்பாடு "
என்னும் தலைப்பில்  பொருள் பொதிந்த உரையை ஆற்றும் 
CPI மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மூ.வீரபாண்டியன்









இடது சாரிகளின் தோல்வி, தோற்கடிக்கப் பட்டதால்!
இழந்த வெற்றியை விட பெரிய வெற்றியை
நோக்கி பயணிக்க வைத்திருக்கிறது!
பயணிப்பதும் பயணித்த இலக்கை அடைவதும்
நம்கையிலேயே..

மாற்றங்கள் சில சமயங்களில் ஏற்றங்களாயின!
ஏற்றங்களிலிருந்த போதும் மாற்றங்கள் அழைத்தன
மிக கடினமான முடிவெடுக்க வேண்டிய தருணங்கள்!

கஷ்டத்தில் இருக்கும் போது
மாற்றங்களை அரவணைக்க துணிவு தேவையில்லை!
மாற்றங்களே தேவைகளாகும் தருணங்களவை!

வென்ற பிறகும் வசதிகளில் திழைக்கும் போதும்
மாற்றம் கொள்ளத் துணிவதே துணிவு!
வாழ்க்கைக்கு இலக்கொன்றை கொண்டோரின் துணிவு!
ஏற்றுக் கொண்ட மாற்றங்கள்  ஏ
மாற்றங்களை
அளித்தாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவு!

தோல்விகள்............     

அனுபவங்களை கற்றுத் தருபவை!
அடையாளம் காட்டுபவை!
எல்லைகளை வரையறுப்பவை!
உடனிருப்போரை தோலுரித்துக் காட்டுபவை!
ஓய்விற்கு ஒய்வு கொடுப்பவை!
தோல்விகள்.. அவமானங்களல்ல!
வழிகாட்டும் அடையாளங்கள்!

வெற்றிகள் போதை..
போதையின் களிப்பு!
வெற்றிப் போதையின் தெளிவே தோல்வி!
இதை அடையாதவர்களில்லை
தவிர்ப்பவர்கள் முன்னேறமுடியாது!
தவிப்பர்கள் மீழமுடியாது!
தாங்குபவர்கள் முன்னேற்றத்தை தவிர்க்க முடியாது!

தோல்விகள்.. மறந்திருந்திருந்த பலதை..
கண்ணீர்ச்சுவையை
அவமானங்களின் பதைபதைப்பை
ஏளனப் பேச்சுக்களை
அதை ஏ
ற்க மனமின்று செய்த வாதாட்டங்களை
அவ்வாதட்டங்கள் வெறும் நேரவிரயமென்பதை
வெற்றிக் களிப்பில் மார் நிமிர்த்தி பீடு நடைபோடையில்
பணிந்து வணங்க மறந்த முகங்களை
என மறந்த பலதை நியாபகப்படுத்தும் மருந்தே தோல்வி!

தவறுகளை வலிக்கத் திருத்தும்
தோல்விகள் நமது ஆசிரியர்!
காலம் முழுக்க படிக்கப் பட வேண்டிய
பாடம் நமது தோல்விகள்!
பாடங்கள் நமது வளர்ச்சிக்கு!
வளர்ச்சியே நமது வெற்றி!
தோல்விகள்   நமது வெற்றிகள்!

Thursday, 12 June 2014

ஜூன் 12

தோழர்.விச்சாரே 

நினைவு தினம் 
மஹாராஷ்ட்ராவின் மாவீரன்

வருந்துகிறோம்

NFTE அகில இந்தியத்தலைவர் 
தோழர்.இஸ்லாம் அகமது 
அவர்களின் துணைவியார் 

திருமதி.ரஷிதா பேகம்
அவர்கள் உடல்நலக்குறைவால் 
இன்று 12/06/2014 இயற்கை எய்தினார் 
என்ற செய்தி கேட்டு துயர் கொள்கின்றோம்.

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
சமீபத்தில்தான் தோழர்.இஸ்லாம் அவர்களின் புதல்வி
 உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். 

அடுத்தடுத்த சோகங்களை சந்தித்த 
தோழர்.இஸ்லாம் அவர்களின் துயரத்தில் 
நாமும் பங்கு பெறுவோம்.

--NFTE-BSNL(INDOOR) திருவண்ணாமலை

Wednesday, 11 June 2014

தொலைபேசி இணைப்பில் முறைகேடு: அடுத்த கட்ட விசாரணைக்கு தயாராகிறது சி .பி.ஐ.


பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. அடுத்தக் கட்ட விசாரணைக்கு தயாராகி வருகிறது.
இதுவரை நடைபெற்ற விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தில்லிக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்த விவரம்: கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், தனது வீடு இருக்கும் ராஜாஅண்ணாமலைபுரம் போட்கிளப் வீட்டுக்கு வழங்கப்பட்ட 323 பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக சன் டி.வி. நிறுவனத்துக்கு வழங்கியதாக புகார் கூறப்பட்டது. இதற்காக தயாநிதிமாறன் தனது வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகத்துக்கு (சுமார் 4 கிலோ மீட்டர் தூரம்) பைபர் கேபிள் அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு மூலம் ரூ. 400 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, புது தில்லியில் சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக தயாநிதிமாறன் வீடு உள்பட பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர், இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு வாரமாக சென்னை தியாகராய நகர் கிரி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தில்லியைச் சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை செய்தனர்.
குறிப்பாக, சன் டி.வி. நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் சன் டி.வி.யின் தலைமை நிர்வாகியாக இருந்த சரத்குமார் ரெட்டி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை செய்யப்பட்டது.
தில்லிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள்: இந்நிலையில் சென்னையில் முகாமிட்டிருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் திங்கள்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள், விசாரணையில் பங்கேற்றவர்கள் அளித்த வாக்குமூலத்தையும் எடுத்துச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் அடுத்தக் கட்ட விசாரணை நடத்த உள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கவே தில்லிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள தயாநிதிமாறன், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் சாட்சிகள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை செய்ய உள்ளனர்.

Monday, 9 June 2014

IDA  உயரும் !
 
ஏப்ரல் மாத விலைவாசி புள்ளி- 239 எனவும் மே மாத விலைவாசி புள்ளி 242 எனவும் உயர்ந்துள்ளதால் ஜூன் மாதம் எந்த உயர்வும் இல்லாவிட்டாலும் கூட நமது IDA, 2.4 சதம் கூடுதல் ஆக வாய்ப்புள்ளது. 
 
*********************************************************************
 
 

BSNL Launches Bharat Phone with Internet at Rs.1099

                          
BSNL launches new 'smartphone' in India at Rs 1,099
State-run telecommunication service provider Bharat Sanchar Nigam Ltd (BSNL) has taken the phone business in India to new heights with the launch of a new handset with e-governance applications for just ₹1099.
The phone dubbed "Bharat phone" was launched by the Visiting Mauritius President Rajkeshwar Purryag in the presence of Governor H R Bhardwaj and state Higher Education Minister R V Deshpande. The handset which is developed with the support of Pantel Technologies sports 3 inch screen and supports 64 MB RAM along with 64 MB internal storage. It is a dual SIM handset with 1.3 megapixel pixel camera and 1,800 mAh LAN battery, which can provide upto 15 days under standby mode and eight hours of talktime.
"The low-cost mobile device will alter the Indian feature phone industry as it has been designed especially for e-governance applications and optimised for Internet access to empower common man," Economic Times quoted BSNL chairman R K Upadhyay.
The phones will also allow users to access e-mail and Facebook. Other features of the BSNL new handset include, download facility and Java games. The phone will be available in the market starting from next week.
"As the phone is pre-bundled with attractive voice plan, the mobile handset offers common man the power of Internet access at an affordable price and will benefit a wide section of society," Upadhyay added.
Recently, BSNL launched a budget phablet in the country in association with Champion Computers Pvt. Ltd. Dubbed BSNL Champion DM6513, the smartphone sports a 6.5-inch capacitive screen and comes with Android v4.2.2 Jelly Bean OS, dual-core processor and 512 MB RAM with inbuilt storage capable of expanding up to 32 GB. The budget phablet comes equipped with 5.0-megapixel main camera, a 2.0-megapixel snapper on the front and a high-capacity 3,500 mAh battery which promises up to 4 hours of talk time and 62 hours under standby mode. It has been priced at ₹6,999.
Key Specifications of BSNL Pantel Bharat Phone
  • 3 inches display
  • 64 MB RAM
  • Internal storage 64 MB
  • Dual SIM capability
  • Audio, video Download
  • Java games
  • 1.3 megapixel pixel camera
  • 1,800 mAh LAN battery (upto eight hours talk time and 15 days under standby mode)