Tuesday, 18 March 2014

என்.எல்.சி.யில் துப்பாக்கிச் சூடு: 

தா. பாண்டியன் கண்டனம் :

 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளியான ராஜா பலியாகி உள்ளார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத் தலைவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலுர் மாவட்டச் செயலாளருமான எம்.சேகர் தொழிலகப் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். தொழிலாளர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. துப்பாக்கியால் சுட்டவரை உடனடியாக கைது செய்வதுடன், தடியடி நடத்தியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

 

Wednesday, 12 March 2014



திருவண்ணாமலையில் NFTE  சங்கத்தின் மூத்த தோழரும், வழிகாட்டியுமான தோழர் T.M. பழனி STS  அவர்களின் மகள் 
 P. இராஜேஸ்வரி A. பிரபாகரன் இவர்களின் திருமணம் 12-03-2014 அன்று ஆற்காடு நகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தோழர்கள் கு.ஜோதி, இரா.தங்கராஜ், G. சுப்ரமணி, T. இராஜேந்திரன், மற்றும்  NFTE  தோழர்களும், சகோதர சங்கத்தோழர்களும் பெறுமளவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.






திருவண்ணாமலையில் NFTE  சங்கத்தின் உறுப்பினர் தோழர் ச. கிருஷ்ணகுமார் M.E.  TTA, BSNL – ப.மகா(எ)ரம்யா M.E.  இவர்களது திருமணம் 12-03-2014 அன்று திருவண்ணாமலையில் சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கத் தோழர்கள் பெறுமளவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.



Saturday, 8 March 2014

மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் ...!!


மகளிர் சமுதாயத்தின் எழுச்சிக்கு வழிவகுக்கும் "உலக மகளிர் நாள் விழா" 8-.3.-2014 அன்று நம்நாடு உட்பட உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம் ஆண்டின் மார்ச்த் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, "உலக மகளிர் நாள்" என ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை உறுதியோடு எதிர்கொண்டு அவற்றை வெற்றிப் படிகளாக்கி, புதிய சரித்திரம் படைத்திட உறுதியேற்போம்......!
    சென்னை கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல்...!

              நடைபெறும் தேதிகள் அறிவிப்பு...!


தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

தேர்தல் நாள்
இடம்
மார்ச் 27
சேலம், வேலூர், தர்மபுரி, தஞ்சாவூர், கும்பகோணம்.
ஏப்ரல் 1
மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோயில், காரைக்குடி.
ஏப்ரல் 3
சென்னை அனைத்து இடங்களுக்கும்
ஏப்ரல் 10
CGMT, STR, Project
ஏப்ரல் 15
Civil, கோலார், மைசூர்
ஏப்ரல் 17
கோயம்புத்தூர், ஈரோடு
ஏப்ரல் 21
கடலூர், புதுச்சேரி, திருச்சி.
ஏப்ரல் 24
பெங்களூர்


Monday, 3 March 2014



திருமண விழாவில் தோழர் சி.கே. மதிவாணன்.
02-03-2014 அன்று திருவண்ணாமலையில் தோழர் பி.தேவராஜ் TM – சாந்தி மகன் மோகன்ராஜ் திருமண விழாவில் தோழர் சி.கே. மதிவாணன் NFTE-BSNL சம்மேளன துணைப் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அப்போது ஜனசக்தி வளர்ச்சி நிதியாக ரூ.1000/-மணமக்களின் சார்பாக தோழர் மதிவாணன் அவர்களிடம் தோழர் தேவராஜ் வழங்கினார்கள்.